118மேருமந்தர புராணம்  


 

ஸ்ரீஷ்டியும்,  வங்கமீது  -  கப்பலின்மீது, அன்று - அன்றொருநாள்,
வந்து - இவ்விடம் வந்து,  மணிச்செப்பு - இரத்தினச் செப்பை, தம்கை
- தங்கள் கையில்,  தந்து - கொடுத்துவைத்து,  போம் - போய் வந்த,
வாணிகன்  -  வர்த்தகன்,  நான்  -  யானாகும்,  என்றான் - என்று
சொன்னான், எ-று.                                       (30)

 254. செப்பெ னச்செப்பி யிட்டதென் செப்பென
     ஒப்பி லாத மணிச்செப்பு வைத்தது
     தப்பி லீர்மறந் திட்டதோ தானென
     எப்ப டிப்பித்த னோவென் றுரைத்தனன்.

     (இ-ள்.)  (அதைக்கேட்டு  மந்திரி)   செப்பென  -  இரத்தினச்
செப்பென்று,  செப்பியிட்டது  -  சொல்லப்பட்டது,  என்  -  என்ன,
செப்பென  -  அதைச்  சொல்வாயாக  என,  (வணிகன்) ஒப்பிலாத -
உவமையில்லாத,  மணிச்செப்பு  -  இரத்தினச் செப்பை,  வைத்தது -
உம்மிடம்    வைத்ததை,   தப்பிலீர்   -   குற்றமில்லாத   தாங்கள்,
மறந்திட்டதோ  -  மறந்துவிட்டீர்கள்  போலும்,  என - என்றுரைக்க,
எப்படி   -   எப்படிச்   சொன்னாய்?,  பித்தனோவென்று   -   நீ
பைத்தியக்காரனோ   வென்று,   உரைத்தனன்   -  மேலும்  மந்திரி
கீழ்வருமாறு சொன்னான், எ-று.

     தான் - அசை.                                     (31)

 255. என்று நானுனைக் கண்டறி யேனினி
     மன்ற வென்கை மணிச்செப்பு வைத்த நாள்
     நின்ற சான்றுள தாகினீ காட்டினால்
     ஒன்று மன்றிமற் றுன்னோடே போகுமே.

     (இ-ள்.)  என்றும்  -  எப்பொழுதும்,  நான் - யான், உனை -
உன்னை, கண்டறியேன் - பார்த்ததில்லை, இனி - இனிமேல், மன்ற -
பொருந்த,  என்கை  -  எனது  கையில்,  மணிச்செப்பு - இரத்தினச்
செப்பை,  வைத்த நாள் - நீ வைத்த தினத்தில்,  நின்ற - நிலையான,
சான்று - சாட்சி,  உளதாகில் - உண்டாகில்,  நீ - நீ,  காட்டினால் -
அதைக்   காண்பித்தால்,    ஒன்றும்   -   பொருந்தும்,   அன்றி -
அல்லாவிட்டால்,   மற்று   -   பின்னை,   உன்னோடே  -  (உனது
வார்த்தையானது)      உன்னுடனே,    போகும்    -  போய்விடும்,
(என்றுரைத்தான்), எ-று.                                   (32)

 256. நன்று சாலவு நம்பிநின் பேரினுக்
     கொன்ற வேயுரைத் தாய்செப்பு வைத்தநாள்
     அன்று மின்று மலாதுள நாளினால்
     என்று மென்னைநீ கண்டது மில்லையே.