(இ-ள்.)
(அதைக்கேட்டு) நம்பி - புருஷரிற் சிறந்தோனே!,
சாலவும் - மிகுதியாக, நன்று - நல்லது, நின்
- உன்னுடைய,
பேரினுக்கு - புகழினால் வியாபித்த பேருக்கு,
ஒன்றவே -
பொருந்தும்படியாகவே, உரைத்தாய் - சொல்லினாய்,
செப்பு -
இரத்தினச் செப்பை, வைத்த - உன்னிடம் வைத்த, நாள் - நாளாகிய,
அன்றும் - அந்நாளும், இன்றும் -
(நான் வந்து கேட்கின்ற)
இந்நாளும், அலாது - அல்லாமல், உள - உண்டாகிய, நாளினால் -
நாட்களில், என்றும் - என்றைக்கும், நீ - நீ, என்னை
- என்னை,
கண்டதுமில்லை - பார்த்தது மில்லை, எ-று.
இது நிந்தாஸ் துதியாகக் கூறியது.
(33)
257. சான்று வேண்டினுஞ் சத்திய கோடராம்
ஆன்ற நீரன்றி யில்லையன் றியாவர்க்குந்
தோன்றி டாமைத் தரவென்று சொன்னநாட்
சான்று வேண்டுஞ் சடத்தை யறிந்திலேன்.
(இ-ள்.) சான்று
- சாக்ஷி, வேண்டினும் - நீர் வேண்டியதாய்க்
கேட்டாலும், சத்தியகோடராம் -
ஸத்யகோஷரென்னும்
பெயரையுடையவராகிய, ஆன்ற - பெரிய, நீரன்றி - நீங்களல்லாமல்,
அன்று - அந்நாளில், இல்லை - வேறொரு சாட்சியமிருந்ததில்லை,
யாவர்க்கும் - எவர்களுக்கும், தோன்றிடாமை
- தெரியாமல்,
தரவென்று - பொருளைக் கொடுப்பாயாகவென்று, சொன்ன நாள்
-
நீர் சொன்ன காலத்தில், சான்று வேண்டும்
- இப்போது நீர்
சாட்சியத்தை இச்சிக்கும், சடத்தை - இச்சடபுத்தியை
(அதாவது :
அஞ்ஞானத்தை), அறிந்திலேன் - யானறியவில்லை, எ-று. (34)
258. கணம தொன்றிலே கண்புதைத் திட்டழப்
பிணம தாகுமிவ் வாழ்க்கையைப் பேணுவான்
அணிக ளாமறி வும்புக ழுங்கெட
மணிகண் மேன்மனம் வைத்ததோர் மாயமே.
(இ-ள்.) கணமதொன்றில்
- ஒரு க்ஷணநோத்திற்குள்ளாக, கண்
புதைத்திட்டு - கண்ணை மூடிக்கொண்டு, அழ -
சுற்றத்தாரழ,
பிணமதாகும் - பிரேதமாகும்படியான, இவ்வாழ்க்கையை - மனுஷ்ய
சரீரத்தினாலாகிய இந்த ஸம்ஸார வாழ்க்கையை,
பேணுவான் -
காக்கும்பொருட்டு, அணிகளாம் -
இம்மனிதப் பிறப்புக்கு
ஆபரணங்களாகிய, அறிவும் - ஞானமும், புகழும் -
கீர்த்தியும்,
கெட - கெட்டு நீங்க, மணிகள்மேல் - இரத்தினங்களின்
மேல்,
மனம் வைத்தது - வஞ்சித்துக் கொள்வதற்கு மனம் வைத்ததானது,
ஓர் - ஒரு, மாயம் - அஞ்ஞானமாகும், எ-று. (35)
|