120மேருமந்தர புராணம்  


 

 259. செய்த நன்றி சிதைத்தறத் தேறினார்க்
     கெய்த வஞ்சனை செய்து பிறர்மனை
     மைய லான்மகிழ் வார்க்கிந்த மண்மிசை
     எய்தி டாப்பழி யின்மை யறியிரோ.

     (இ-ள்.) செய்தநன்றி - ஒருவர் செய்த வுபகாரத்தை, சிதைத்து -
கெடுத்தும்,  அறத்தேறினார்க்கு  -  (அதுவல்லாமலும்) சந்தேகமின்றித்
தெளிந்து நம்பின பேர்களுக்கு,  எய்த - அடையும்படியாக, வஞ்சனை
செய்து   -  சூது   செய்தும்,  பிறர்  மனை  - அன்னியஸ்திரீகளை,
மையலால்   -   காமமயக்கத்தினால்,   மகிழ்வார்க்கு  -   மகிழ்ந்து
சேர்கின்றவர்களுக்கு, இந்த மண்மிசை - இப்பூமியின் பேரில், எய்திடா
- அடையாத,  பழியின்மை   -   பழியில்லாததை,  அறியிரோ - நீர்
அறியமாட்டீரோ?, எ-று.

     எய்திடாப்   பழியின்மை   யென்றதனால்,   எல்லாப்  பழியும்
அடையும் என்பது பெறப்படும்.                             (36)

வேறு.

 260. பிறர்பொருள் வைத்தல் கோடல் பிறர்தமக் கீதன் மாற்றன்
     மறமென வன்று சொன்ன வாய்மொழி மறந்திட் டீரோ
     திறமல துரைக்க வேண்டாஞ் செப்புக்கொண் டிருப்ப தன்றி
     முறைமுறை பித்த னாக்கி முடிந்தனீர் மோகத் தாலே.

     (இ-ள்.) பிறர்பொருள் - அன்னியருடைய  பொருளை, வைத்தல்
- நிட்சேபித்துக் கொள்வதும்,  கோடல் - அபகரித்துக் கொள்ளுதலும்,
பிறர் தமக்கு -  அன்னியர்களுக்கு,  ஈதல் - கொடுத்தலும், மாற்றல் -
மாற்றிவிடுவதும், மறமென - பாபமாகு மென்று, அன்று - அப்பொழுது,
சொன்ன - சொல்லிய,  வாய்மொழி - வசனத்தை, மறந்திட்டீரோ - நீர்
மறந்துபோய் விட்டீரோ, மோகத்தாலே - பொருளாசையாலே, செப்பு -
எனது இரத்தினச் செப்பை, கொண்டு - கைக்கொண்டு, இருப்பதன்றி -
இருப்பதல்லாமல்,  முறைமுறை - நான் பேசும் ஒவ்வொரு முறையிலும்
திரும்பத்  திரும்ப, பித்தனாக்கி  -  என்னைப்  பைத்தியக்காரனாக்கி,
முடிந்தனீர்  -  இவ்வாறு சொல்ல இசைந்தீர்கள், திறமலது - இவ்வாறு
உறுதியற்றதாகிய     வார்த்தையை,     உரைக்க      வேண்டாம் -
சொல்லவேண்டாம், எ-று.                                   (37)

 261. என்றலு மெழுந்த கோபத் தெறியெறி யென்ன வோடிப்
     பொன்றுமா றடித்து நின்றார் புறப்படத் தள்ளப் போந்திட்
     டன்றவ னடித்துச் செப்புக் கொண்டதற் கவல முற்றுச்
     சென்றவன் றெருவு தோறுஞ் சிலபகல் பூச லிட்டான்.