(இ-ள்.)
என்றலும் - என்று பத்திரமித்திரன் சொல்லவும், எழுந்த
- உண்டாகிய, கோபத்து - கோபத்தினாலே, எறி எறி
யென்ன -
இவனை அடி அடியென்று சொல்ல, நின்றார் - அவ்விடத்தில் நின்ற
ஏவலாளர்கள், ஓடி - போய், பொன்றுமாறு - இறந்து படும்படியாக
(அதாவது : மிகுதியாக), அடித்து - அடித்து, புறப்பட - வெளியில்
போகும்படியாக, தள்ள - அவனைத் தள்ளிவிட, போந்திட்டு - வந்து,
அன்று - அப்பொழுது, அவன் - அம்மந்திரி, அடித்து - அடித்து,
செப்புக்கொண்டதற்கு - இரத்தினச் செப்பை யபகரித்துக்கொண்டதற்கு,
அவலமுற்று - வருத்தமடைந்து, தெருவுதோறும்
சென்று -
வீதிகள்தோறும் போய், அவன் - அப்பத்திரமித்திரன், சில
பகல் -
சில தினங்கள், பூசலிட்டான் - (கீழ்வருமாறு) இரைச்சலிட்டான்,
எ-று. (38)
262. சத்திய கோட னென்னுஞ் சாதியால் வேதி யன்றான்
வித்தத்தாற் பெரியன் றூய னென்றியான் மிகவுந்
தேறி
வைத்தவென் மணியைக் கொண்டு தருகிலன் மன்னகேண்மோ
பித்தனு மாக்கு மென்னைப் பெரும்பொரு ளடக்கு வானே.
(இ-ள்.) (அவ்வாறு
இரைச்சலிடத் தொடங்கிய அவன்) சத்திய
கோஷனென்னும் - சத்திய கோஷனென்கின்ற,
சாதியால் -
ஜாதியினால், வேதியன் - பிராம்மணனாகிய
ஸ்ரீ பூதி என்கிற
மந்திரியானவன், வித்தத்தால் - ஞானத்தால், பெரியன் - பெரியவன்,
தூயன், பரிசுத்த குணத்தையுடையவன், என்று - என்று நினைத்து,
யான் - நான், மிகவும் - மிகுதியாக, தேறி - தெளிந்து,
வைத்த -
அவனிடம் கொடுத்து வைத்த, என் - எனது,
மணியை - இ??
தினத்தை, கொண்டு கைக்கொண்டு, தருகிலன் - அவன் கொடுக்கிலன்,
பெரும்பொருள் - எனது பெரிய பொருளை, அடக்குவான் - தனக்குள் அடக்கிக்கொள்ளும் பொருட்டு,
என்னை - என்றனை, பித்தனுமாக்கும்
- பைத்தியக்காரனாகவும் செய்கின்றான், மன்ன - இந்நகரத்தையாளும்
அரசனே!, கேண்மோ -
இதைக் கேட்பாயாக, (என்று
கூச்சலிட்டுக்கொண்டு திரிந்தான்), எ-று. (39)
263. தன்வழிக் குற்றங் காணாக் கண்ணெனத் தான்செய் குற்ற
முன்னிடா தவனைக் கோபித் தூர்வயிற் கடிய லுற்று
மின்னெனக் கரக்குங் கள்ளர் தங்களை விட்டான்
வீட்டி
லுன்னுதற் கரிய வாய பொருளெலா மொருங்கு கொண்டார்.
(இ-ள்.) தன்வழி
- தன்னுளுண்டாகிய, குற்றம் - குற்றத்தை,
காணா - காணாத, கண்ணென - நேத்திரத்தைப்
போல, தான்
செய்குற்றம் - (இம்மந்திரியானவன்) தான் செய்த
தப்பிதத்தை,
உன்னிடாது - நினைத்தறியாமல், அவனை - அப்பத்திரமித்திரனை,
கோபித்து - சினந்து, ஊர்வயிற் கடியலுற்று - அவ்வூரி |