122மேருமந்தர புராணம்  


 

லிருந்தும் நீக்க உத்தேசித்து,  மின்னென - மின்னல்போல், கரக்கும் -
பிறர் பொருளைத் திருடி மறையும் சாமர்த்தியமுள்ள, கள்ளர் தங்களை
- சோரர்களை, வீட்டில் - (பத்திரமித்திரனது) கிருகத்தில், விட்டான் -
ஏவினான்,  உன்னுதற்கரியவாய - நினைத்தற்  கருமையானவையாகிய,
பொருளெலாம்  -  எல்லாப் பண்டங்களையும்,  ஒருங்கு - ஒருங்காக,
கொண்டார் - (அத்திருடர்) அபகரித்துக்கொண்டார்கள், எ-று.    (40)

 264. பணமணிக் கிரங்கு நாகம் பணத்தையு மிழந்த தேபோற்
     றுணிமணிக் கிரங்கு நாய்கன் றொடுபொருண் முழுதும் போகக்
     குணமணி யிலாத கோடன் கள்வனென் பொருள் கொண்டானென்
     றணிநக ரிரங்க வாற்றப் பூசலிட் டவல முற்றான்.

     (இ-ள்.)   (அவ்வாறு    கொள்ளவே)    பணம்   -   தனது
பணாமுடியிலிருக்கும்,   மணிக்கு   -   இரத்தினத்துக்கு,  இரங்கும் -
(அதனை யிழந்து) வருத்தமடையும், நாகம் - நாகமானது, பணத்தையும்
- பணாமுடியையும்,  இழந்ததேபோல்  -  இழந்து  விட்டதைப்போல்,
துணி - ஒளிபெற்ற, மணிக்கு - தனது  இரத்தினங்களுக்கு, இரங்கும் -
வருத்தமடைகின்ற, நாய்கன் - வணிகனாகிய  பத்திரமித்திரன்,  தொடு
பொருள்  முழுதும்   -   தனது   பெரும்பொருளெல்லாம்,  போக -
போய்விட, குணமணியிலாத -  அழகிய  நற்குணமில்லாத, கோடன் -
ஸத்தியகோஷனென்னும், கள்வன் - திருடன், என் பொருள் - எனது
வீட்டிலுள்ள  பொருள்களையும்,  கொண்டானென்று  -  அபகரித்துக்
கொண்டானென்று,  அணி  -  அழகிய,  நகர்  -  பட்டணத்திலுள்ள
ஜனங்கள்,  இரங்க  -  கேட்டு  வருத்தமடையும்படியாக,   ஆற்ற -
மிகவும்,     பூசலிட்டு     -    இரைச்சலிட்டு,    அவலமுற்றான் -
வருத்தமடைந்தான், எ-று.                                  (41)

 265. மன்னவ னதனைக் கேட்டு மந்திரி தன்னைக் கூவி
     என்னிவ னுரைத்த தென்ன விறைவகே ளிவனோர் பித்தன்
     றன்னையா னறிந்த தில்லை தருகவென் மணிச்செப் பென்னாப்
     பின்னைபோ யென்னைக் கள்வ னென்றிட்டான் பெரிய பூசல்.

     (இ-ள்.)   மன்னவன்   -   ஸிம்மஸேனவரசன்,   அதனை -
(அந்தவணிகனால்  இடப்பட்ட)  அவ்விரைச்சலை,  கேட்டு - கேட்டு,
மந்திரி   தன்னை  -  அமைச்சனாகிய   ஸத்தியகோஷனை,  கூவி -
அழைத்து,   என்  -  என்ன,  இவன் - இவ்வணிகன்,  உரைத்தது -
சொல்லுவது,  என்ன - என்று  கேட்க, (அவன்) இறைவ - அரசனே!,
கேள் - கேட்பாயாக,  இவன் - இம்மனிதன்,  ஓர் - ஒரு,  பித்தன் -
பைத்தியக்காரன்,   தன்னை   -   இவன்றன்னை,  யான்   -  நான்,
அறிந்ததில்லை   -   என்றுங்கண்டதில்லை,  (அப்படியிருக்கச்   சில
தினங்கட்கு முன் என்னிடம் வந்து)  தருக என்மணிச்செப் பென்னா -
என்னுடைய இரத்தினச் செப்பைக் கொடுப்பாயாக