விரோத மில்லாமல் உள்ளதைச்
சொல்லி, கூப்பிட்டான் -
பத்திரமித்திரன் இரைச்சலிட்டான், எ-று. (44)
268. சிறகமை பறவை பேர்ப்பா னுடம்பெலாஞ் செடியின் மூடிப்
பறவையைச் சிமிழ்ப்பின் வாங்கும் பாவியைப் போல நீயும்
மறையவ னறிவ னென்னும் மாயத்து மறைந்து நின்றென்
பெறலரும் மணியைக் கொண்டா யென்றவன் பேசக் கேளா.
(இ-ள்.) (அப்படிப் பூசலிட்டுப்
பின்னரும்) சிறகு - இறகு, அமை
- அமைந்த, பறவை - பக்ஷிகளை, பேர்ப்பான் - பிடிப்பான் வேண்டி,
உடம்பெலாம் - தனது சரீரமுழுமையும், செடியின் - தழைகளால், மூடி
- மறைத்து, பறவை - அப்பக்ஷிகளை, சிமிழ்ப்பின் - வலைக்குள்,
வாங்கும் - வளைத்துப் பிடிக்கின்ற, பாவியைப்போல -பாபிஷ்டனாகிய
குருவிக்காரனைப் போல, நீயும் - நீயும், மறையவன் - பிராம்மணன்,
அறிவன் - ஞானத்தையுடையவன், என்னும் - என்கிற, மாயத்து
-
மாய்கையினால், மறைத்து - உனது கள்ளத்தை
மூடி, நின்று -
மோசவழியிலே நின்று, என் - என்னுடைய, பெறலரும் - சம்பாதித்தற்
கருமையாகிய, மணியை - இரத்தினத்தை, கொண்டாய் - அபகரித்துக்
கொண்டாய், என்று - என்று சொல்லி, அவன் - அப்பத்திரமிரத்தின்,
பேச - மந்திரியை நிந்தித்துப் பேசி
இரைச்சலிட, கேளா -
அதைக்கேட்டு, எ-று. (45)
269. படுமத யானை விட்டும் பாசத்தி னாயை விட்டும்
கொடி நகர்ப் பேயன் றன்னைக் கடிகவென் றமைச்சன் கூறக்
கடியவர் படியிற் கண்டு செய்வதற் கஞ்சிக் காலை
நெடியதோர் மரத்தி னேறி நித்தமா யழைத்திட்
டானே.
(இ-ள்.) படுமதயானை
- கொல்லுகின்ற மதயானையை, விட்டு -
(இவ்வணிகன் மேல்) விட்டும், பாசத்தின் - சங்கிலியினாற் பிணித்திரா
நின்ற, நாயை - வேட்டை நாய்களை, விட்டும்
- ஏவியும்,
பேயன்றன்னை - பைத்தியக்காரனாகிய இவனை, கொடி - துவஜக்
கொடிகளையுடைய, நகர் - இந்நகரத்தினின்றும்,
கடிகவென்று -
துரத்துவீராக என்று, அமைச்சன் - மந்திரியானவன், கூற - சொல்ல,
கடியவர் - கொடுமையையுடையவர்களாகிய
அவனுடைய
ஏவலாளர்கள், படியில் - பூமியில், கண்டு - இவ்வணிகனைப் பார்த்து,
செய்வதற்கு - அப்படியே செய்வதற்கு, அஞ்சி - வணிகன் பயந்து,
காலை - பிராதக் காலத்தில், நெடியது - பெரிதாகிய,
ஓர் - ஒரு,
மரத்தின் - விருக்ஷத்திலே, ஏறி - ஏறி, நித்தமாய் -
நாள்தோறும்,
அழைத்திட்டான் - (கீழ் வருமாறு) கூச்சலிட்டான், எ-று. (46)
270. தூயநல் வேத நான்குஞ் சொல்லிய சாதி யாதி
மேயநல் லமைச்ச னென்றும் விருதுமெய் யுரைத்த லென்றுந் |