தீயினற் றொழில
னென்றுந் தேறியான் வைத்த செப்பை
மாயநீ செய்து கொண்டால் வரும்பழி பாவ மன்றோ.
(இ-ள்.) தூய - பரிசுத்தமாகிய,
நல் - நன்மையான, வேதம்
நான்கும் - சதுர்வேதங்களும், சொல்லிய - உரைத்த,
சாதியாதி -
முதல் ஜாதியில், மேய - பொருந்திய, நல்
- நன்மையாகிய,
அமைச்சனென்றும் - மந்திரி யென்றும், விருது - தனது விரதமானது,
மெய்யுரைத்த லென்றும் - ஸத்தியங் கூறுதலென்றும், தீயின்
-
அக்கினியினாலே, நற்றொழிலெனென்றும் - (ஆகார
வேளைக்கு
முன்) ஒளபாஸனம் செய்யப்பட்ட குணமுடைவனென்றும், தேறி
-
தெளிந்து, யான் - நான், வைத்த - அடைக்கலமாக வைத்த, செப்பை
- இரத்தினச் செப்பை, நீ - நீ, மாயஞ்செய்து - வஞ்சனைசெய்து,
கொண்டால் - அபகரித்துக்கொண்டால், பழி - பழிச்சொல்லும், பாவம்
- பாவமும், வருமன்றோ - வந்துசேரும், எ-று.
271. கொற்றவெண் குடையுஞ் சீயவணையுஞ்சா மரையு நீத்தால்
வெற்றிவேல் வேந்த னென்னநீ யென்ன வேறி லாதாய்
குற்றமென் றறிந்து மென்ன குறையிலென் செப்பைக் கொண்டாய்
மற்றிதோ பூதி மாய மாகுமிவ் வையத் தையா.
(இ-ள்.) (அரசன் இராஜ்ஜியத்தைக்
கவனிக்க முடியாமலிருக்கும்
சில சமயங்களில்) கொற்றம் - வெற்றி பொருந்திய, வெண் குடையும் -
வெள்ளைக் குடையும், சீயவணையும் - சிம்மாஸனமும், சாமரையும் -
வெண்சாமரையும், நீத்தால் - தான் நீக்கி உனக்களித்தால், வெற்றி
-
வெற்றி பொருந்திய, வேல் - வேலையுடைய,
வேந்தனென்ன -
அரசனென்றும், நீயென்ன - நீ என்றும், வேறிலாதாய் - வேறில்லாமல்
அவ்வரசனுக்குச் சமானமான தன்மையைப் பெற்றிருக்கக் கூடியவனே!,
குற்றமென்றறிந்து - பிறர் பொருள்களை அபகரிப்பது குற்றமென்று
தெரிந்திருந்தும், ன்ன குறையில் - உனக்கு என்ன குறைவால், என்
செப்பை - எனது இரத்தினச்செப்பை, கொண்டாய் - கைக்கொண்டாய்,
பூதி - ஸ்ரீ பூதியாகிய மந்திரியே!, இவ்வையத்து - இவ்வுலகத்தில், இது
- இச்செய்கை, மாயமாகும் - மாயத்தையுடையதாகும், ஐயா - ஐயனே!,
எ-று.
மற்று, ஓ - அசைகள்.
(48)
272. மறம்பழி சிறுமை நிந்தை வந்தெய்த மணியை வவ்வின்
அறம்புகழ் பெருமை சீர்த்தி யறிவொடு செறிவி லாக்கும்
மறந்துவைத்தூறு தொட்டு வைப்பினை வவ்வு வாரைத்
துறந்திடுந் திருவென் றோதுஞ் சுருதியும் விருத்த மாய்த்தோ. |