126மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  மறம்  -  பாவமும்,  பழி - பழிச்சொல்லும், சிறுமை -
தாழ்மையும், நிந்தை - இகழ்ச்சியும்,  வந்தெய்த - வந்தடையும்படியாக,
மணியை வவ்வின் - எனது இரத்தினத்தை அபகரித்தால், (அது) அறம்
- தருமமும்,  புகழ் - புகழ்ச்சியும்,  பெருமை - மேம்பாடும்,  சீர்த்தி -
சிறப்பும்,  அறிவொடு - ஞானமும், செறிவு - சேர்தல், இல் ஆக்கும் -
இன்மையாக்கும்,   (ஆயினும்   மந்திரி   சௌக்கியமாயிருக்கின்றான்;
ஆதலின்)  மறந்து - தெரியாமல்,  வைத்து - வைக்க,  ஊறுதொட்டு -
இடையூறு    செய்யத்  தொடங்கி,   வைப்பினை  -  அந் நிக்ஷேபப்
பொருளை,  வவ்வுவாரை  -  அபகரிப்பவர்களை, திரு  -  இலக்குமி,
துறந்திடும் - நீங்கிவிடும், என்றோதும் - என்று சொல்கின்ற, சுருதியும்
- சாஸ்திரமும்,    விருத்தமாய்த்து    -   இம்மந்திரி    விஷயத்தில்
பயனற்றதாயிருக்கின்றது, எ-று.                             (49)

 273. வடிநுனைப் பகழிநூறும் மன்னரை மாயஞ் செய்திட்
     டடுமத யானை வவ்வ லமைச்சருக் காய வஞ்சம்
     வடுவிலார் தேறித் தங்கைப் பொருளினை வைத்து வந்து
     அடிமிசை யுறங்கும் போழ்தில் வஞ்சிப்பர் னமைச்ச னாமோ.

     (இ-ள்.) வடி - கூர்மைபெற்ற, நுனை - நுனியையுடைய, பகழி -
அம்புகளை,  நூறும் - செலுத்தும்படியான,  மன்னரை - பகையரசரை,
மாயஞ்  செய்திட்டு -  மாறுபாடு  செய்து, அடும் - பிறரைக் கொலை
செய்யும்படியான, மதம்  - மதம்  பொருந்திய,  யானை - அவர்களது
பட்டத்து  யானையை,  வவ்வல் - அபகரிக்கின்றது,  அமைச்சருக்கு -
அரசனுடைய   மந்திரிகளுக்கு,  ஆய   -   உண்டாகிய,  வஞ்சம் -
வஞ்சனையாகும்,     (அப்படியல்லாமல்)    வடுவிலார்    -   குற்ற
மில்லாதவர்கள், தேறி - நல்லவரென்று தெளிந்து, தம் - தங்களுடைய,
கைப்பொருளினை   -   சொந்தப்   பொருளை,  வைத்து  - வைத்து
விட்டுப்போய்,  வந்து - மறுபடி வந்து, அடிமிசை - பாதத்தின் பேரில்
நமஸ்கரித்து, உறங்கும் போழ்தில் -வாடிக்கிடந்து கேட்குங் காலத்தில்,
வஞ்சிப்பான்  -  வஞ்சனை  செய்பவன், அமைச்சனாமோ  -  இராஜ
மந்திரியாவனோ?, எ-று.                                   (50)

 274. மந்திரம் பயின்று சால வல்லவர் தமக்குப் பேய்கள்
     மந்திரம் பூதி தன்னா லன்றிமற் றொன்றிற் றீரா
     வெந்துயர் நரகத் துய்க்கும் வேகத்து மோகப் பேயை
     மந்திரி பூதி நீயேன் றீர்த்திடா வாறி தென்றான்.

     (இ-ள்.)  மந்திரம்   பயின்று  -  மந்திரங்களைக்கற்று,  சால -
மிகவும், வல்லவர் தமக்கு  வல்லமையையுடையவர்களுக்கு, பேய்கள் -
பிசாசுகள்,    மந்திரம்    -    மந்திரத்தினாலும்,    பூதிதன்னால் -
விபூதியினாலும், அன்றி - அல்லாமல், மற்றொன்றில் - வேறொன்றால்,
தீரா - நீங்கமாட்டா, (அப்படியிருநதும்) வெம் - வெப்பம்