பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 127


 

பொருந்திய,  துயர்  -  துன்பத்தையுடைய,  நரகத்து  -  நரகத்திலே,
உய்க்கும்   -   செலுத்தும்படியான,  வேகத்து  -  தீவிரத்தையுடைய,
மோகப்பேயை .  துராசையாகிய பிசாசை,  மந்திரி - மந்திரியும், பூதி -
ஸ்ரீபூதியும்  (ஆகிய),  நீ - நீ,  தீர்த்திடாவாறு - நீக்காதவிதாயமாகிய,
இது - இச்செய்கை,  ஏன்என்றான்  - யாதுகாரணமென்று சொன்னான்,
எ-று.                                                  (51)

 275. நீர்மையுங் குணமு நின்ற சாதியு நிறமுங் கல்விச்
     சீர்மையுஞ் சாரு வாக வறிந்துநீ செய்யு மாயம்
     நேர்மைசெய் தரசன் கேட்ட நாளின்க ணீங்கு முன்றன்
     கூர்மையுங் குணமு மெல்லாங் காட்டுவன் கோட வென்றான்.

     (இ-ள்.)  (மேலும்)  கோட  -  சத்தியகோஷனே!,  நீர்மையும் -
ஒப்புரவும், குணமும்  -  மேலான  குணமும், நின்ற  -  நிலைபெற்ற,
சாதியும்  -  ஜாதியும்,  நிறமும்  -  ஒளியும்,  கல்வி  -  வித்தையும்,
சீர்மையும்  -  சிறப்பும்,  சாருவாக  -  சேர்ந்திருக்கவும்,  அறிந்து -
சகலமுந்   தெரிந்து,   நீ - நீ,   செய்யும்  -  செய்கின்ற,  மாயம் -
வஞ்சனையை,   அரசன்   -   இராஜாவானவன்,   நேர்மைசெய்து -
நம்மிருவரையும்  நேரில்  வைத்துக்கொண்டு,  கேட்ட  - கேட்கின்ற,
நாளின்கண்  -  காலத்தில்,   நீங்கும்   -   நீங்கிவிடும்,  உன்றன் -
உன்னுடைய,  கூர்மையும் - சூக்ஷ்ம  புத்தியும்,  குணமும் - மேலான
குணமும்,  (ஆகிய) எல்லாம் - எல்லாவற்றையும், காட்டுவன் - யான்
உண்மையாக  விளக்கிக்  காண்பித்துவிடுவேன்,  என்றான்  -  என்று
சொன்னான், எ-று.                                       (52)

 276. சொரிமதக் களிற்று வேந்தன் செவியுற நாளும் வந்திப்
     பரிசினா லழைப்பக் கேட்டும் பருவர லின்றி விட்டான்
     சுரிகுழற் கருங்கட் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற்
     றெரிவைமா திராம தத்தை சித்தத்தொன் றெழுந்த தன்றே.

     (இ-ள்.)     சொரிமதம்    -    மதஞ்சொரியும்,   களிற்று -
யானையையுடைய,  வேந்தன்  -  அரசனது,  செவி - காதில், உற -
பொருந்த,  நாளும் - நாடோறும்,  வந்து - பிராதக் காலத்தில் வந்து,
(மரத்தின்    மேலேறிக்கொண்டு),    இப்பரிசினால்    -  இப்போது
சொன்னவகை யாகவே, அழைப்ப கூச்சலிட, கேட்டும் - அது அரசன்
காதில் விழுந்தும்,  பருவரலின்றி  -  அருவருத்தலின்றி,  விட்டான் -
அரசன் அதை விசாரிக்காமல் விட்டான்,  (அப்படியிருக்கும்போது) சுரி
- சுருண்ட,   குழல்   -   அளகத்தையும்,  கரும்  -  கரிய,  கண் -
கண்ணையும், செவ்வாய் - சிவந்த வாயையும், துடி - உடுக்கைபோன்ற,
இடை   -   இடையையும்,   பரவை   -   விசாலமான,  அல்குல் -
கடிதடத்தையும், (உடைய) தெரிவைமாது - தெரிவைப்பருவத்தையுடைய
மாதாகிய, இராமதத்தை - இராஜபத்தினியாகிய இராமதத்தா தேவியின்,
சித்தத்து - மனதில், ஒன்று - ஒரு யோசனை, எழுந்தது - உண்டானது,
எ-று.