277. முன்புபின் பொன்றுந் தம்மின் மலைவிலா
மூர்த்தி நூல்போற்
பின்புமுன் பொன்ற வென்று முரைக்கின்றான் றன்னைப் பித்த
னென்பதொன் றன்றென் றெண்ணி யவனைத்தா னழைத்து ராமை
முன்புநின் றுருவக் கேட்டுப் போயின்ன முறையி டென்றாள்.
(இ-ள்.) முன்பு -
முன்னுக்கு, பின்பு - பிற்பாடு, ஒன்றும் -
யாதொன்றும், தம்மின் - தமக்குள், மலைவிலா - மாறுபாடில்லாத
(அதாவது : பூர்வாபர விரோதமில்லாத), மூர்த்திநூல்
போல் -
ஸர்வஜ்ஞனால் சொல்லப்பட்ட பரமாகமம்போல,
என்றும் -
எப்பொழுதும், பின்பு முன்பொன்ற -
பின்னதும் முன்னதும்
வித்தியாசமடையாமல் ஒத்துவர,
உரைக்கின்றான்றன்னை -
சொல்லுகின்ற இவனை, பித்தனென்பது - பைத்தியக்காரனென்று
சொல்வது, ஒன்று - ஒரு காரியம், அன்றென்று - அல்லவென்று,
எண்ணி - யோசித்து, ராமை - இராமதத்தையானவள், அவனை
-
அவ்வணிகனை, அழைத்து - கூப்பிட்டு, முன்பு நின்று -
எதிரில்
நின்று, உருவக்கேட்டு - அவனுடைய விருத்தாந்தம்
முழுவதும்
மனத்திற் பதியக்கேட்டு, போய் - நீ போய், இன்னம்
இன்னமும்,
முறையிடு - இப்படியே சொல்லி முறையிடுவாய், என்றாள் - என்று
அவனிடம் சொன்னாள், எ-று.
தான் - அசை. (54)
வேறு.
278. வாளார் தடந்தோண் மன்னர் மன்னர்தஞ் செய்கைவன்போர்
தோளால் விலக்கி முறை கேட்டறம் போற்றலாகிற்
றாளாள நல்லா னிவன்றானிடும் பூச னாளுங்
கேளா தொழிவா னிதுவென்னரு ளென்று கேட்டாள்.
(இ-ள்.) (அவ்வாறு
சொல்லிப் பின் அவள் அரசனிடத்தில்)
வாள் - வாள்வித்தையில், ஆர் - நிறைந்த, தடம் - பெரிய, தோள் -
புயத்தை யுடைய, மன்னர் மன்னர்தஞ் செய்கை
- இராஜாதி
இராஜர்களுடைய காரியமாவது, வன் - வலிமைபொருந்திய, போர் -
சத்துரு ராஜாக்களால் தாக்கப்பட்ட யுத்தத்தை,
தோளால் -
புயபலத்தால், விலக்கி - நீக்கி, முறை - தமதுராச்சியத்தில் குடிகள்
இடும் முறையீடுகளை, கேட்டு - விசாரித்து, அறம்
- தருமத்தை,
போற்றல் - பாதுகாத்தலாம், ஆகில் - அரசுநீதி அப்படி
ஆயின்,
தாளாள - அத்தொழிலில் முயற்சியையுடையவரே!,
நல்லான் -
நல்லவனாகிய, இவன்றானிடும் பூசல் -
இம்மனிதனாலிடப்பட்ட
இரைச்சலை, நாளும் - தினந்தோறும்,
கேளாதொழிவான் -
கேட்காமல் விடும்படியான, இது - இத்தன்மை, என் - என்ன காரியம்,
அருளென்று - அதை எனக்குச் சொல்லியருள்வீரென்று, கேட்டாள் -
கேட்டனள், எ-று. |