பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 129


 

 279. மத்தக் களிற்றா னழைப்பான் மத்தனென்ன மங்கை
     நித்தம் வந்தம் மரத்தப்பொழுது தேறி நீதி
     வைத்த வகையா லுரைப்பான் மத்தனல்ல னென்ன
     முத்தன்ன பல்லாய் முறைநீயிது கேண்மோ வென்றான்.

     (இ-ள்.) (அதைக்கேட்டு) மத்தம் - மதம்பொருந்திய,  களிற்றான்
- யானையையுடைய     அரசன்,     அழைப்பான்    -    அப்படி
இரைச்சலிடுபவன்,  மத்தன்  -  பயித்தியக்காரன்,  என்ன  -  என்று
சொல்ல,  மங்கை  -  இராமதத்தை,  நித்தம் -  நாடோறும், வந்து -
அரண்மனை  எதிரில் வந்து,  அம்மரத்து - அவ்விடமிருக்கும் பெரிய
விருக்ஷத்தின்  பேரில்,  அப்பொழுது  - அவ்விடியற்காலத்தில், ஏறி -
ஏறிக்கொண்டு,  நீதி  வைத்தவகையால் - முன்பின் விரோதமில்லாமல்
நீதி  பொருந்திய  விதமாக,  உரைப்பான்  -  சொல்லுகின்ற  இவன்,
மத்தனல்லன்  -  பைத்தியக்காரனல்லன்,  என்ன  -  என்று சொல்ல,
முத்தன்னபல்லாய்  - முத்துப்போன்ற பற்களையுடைய தேவியே!, நீ -
நீ, இது முறை - இந்தமுறைப்பாட்டை,  கேண்மோ - கேட்கக்கடவாய்,
என்றான் - என்று அரசன் தேவியிடத்தே சொன்னான், எ-று.

வேறு.

 280. நீதியே படித்தான் போலவழைக்கின்றான் வழக்கு நின்ற
     வேதியன் செயலு மெல்லாம் விளக்குப்போற் காட்ட வல்லன்
     சூதியான் பூதி யோடு பொருதபின் னென்னச் சொன்னாள்
     யாதுநீ வேண்டிற் றெல்லா மிசைந்தன னென்று சொன்னான்.

     (இ-ள்.)    (அதைக்கேட்டு   இராமதத்தை)   நீதியே  -  நீதி
சாஸ்திரமே,     படித்தான்     போல    -   படித்தவன்    போல
வித்தியாசமில்லாமல்,      அழைக்கின்றான்    -   சொல்பவனாகிய
வணிகனுடைய, வழக்கும்  -  வழக்கையும்,  நின்ற - மந்திரி பதத்தில்
நிலைபெற்றிருக்கின்ற, வேதியன்  -  ஸ்ரீபூதியாகிற   பிராமணனுடைய,
செயலும்  -  செய்கையும்,  (ஆகிய)  எல்லாம்  -  எல்லாவற்றையும்,
விளக்குப்போல்  -  சகலத்தையும்  காட்டும்   தீபம்போல,  காட்ட -
காண்பித்தற்கு,  சூது  -  சூதாட்டத்தில்,  யான் - நான், பூதியோடு -
ஸ்ரீபூதியுடன்,  பொருதபின்  -  எதிர்த்து  ஆடிய  பிறகு,  வல்லன் -
வல்லமையுடையளாவேன்,  என்ன - என்று, சொன்னாள் - கூறினாள்,
நீ - நீ,  வேண்டிற்று  -  இச்சித்தது,  யாது  -  எதுவோ, எல்லாம் -
அதற்கெல்லாம்,    இசைந்தனன்  -  நான்  பொருந்தினேன்,  என்று
சொன்னான் - என்று அரசன் சம்மதித்துக் கூறினான், எ-று.      (57)

 281. அரசன தருளி னாலே மந்திரி யவனைக் கூவிப்
     பெரிதுபோமாக வுண்டாடிப் பின்னையொன் றைத்தொடங்கா