நகரச்சிறப்பு.
வேறு.
26. அறைகழ லரசர் கோமா னிருக்கைய தமைதி செப்பிற்
குறைவிலா வீத சோகங் குபேரன திருக்கை போலும்
நெறியினாற் புகை யிரண்டா றொன்பது நீண்ட கன்று
மறுகுமா நதிகள் போன்று வழங்குமா யிரத்த தாமே.
(இ-ள்.) அறை -
சப்தியாநின்ற, கழல் - வீரகண்டையையுடைய,
அரசர் கோமான் - இராஜாதிராஜனான சக்ரவர்த்தியானவன்,
இருக்கையது - இராநின்ற இராஜதானியினது, அமைதி - மாட்சிமையை,
செப்பில் - சொல்லு
மிடத்தில், (அது) குறைவிலா -
தனமுதலியவைகளாற் குறைவில்லாத, குபேரனது - குபேரனென்னும்
தேவனுடைய, இருக்கைபோலும் - நகரமாகிய அளகாபுரிக்குச்
சமானமாகின்ற, வீதசோகம் - வீதசோகமென்னும் பெயருடையதாகும்;
நெறியினால் - கிரமத்தால் (அந்நகரானது),
புகையிரண்டாறு -
பன்னிரண்டு யோசனை, நீண்டு - நீளமாகி, ஒன்பதகன்று - ஒன்பது
யோசனை யகலமாகி, மாநதிகள்போன்று - ஜலம் பற்றறாமலொழுகும்
மஹா நதிகளுக்குச் சமானமாகி, வழங்கும் -
ஜனங்களால்
செல்லப்படுகின்ற, மறுகு ஆயிரத்ததாம் -
ஆயிரம் மஹா
வீதிகளை யுடைத்தானதாம், எ-று. (26)
27. அறுபது தலைவைத் திட்ட மூன்றுநூ றறிவன் கோயில்
செறிமலர்ச் சோலைக் குன்றம் வாவியுஞ் செப்பி னன்ன
அறுபதிற் குணிக்கப் பட்ட வாயிரஞ் சேரி பாடி
யறுபதோ டிசைந்த பத்தாற் குணித்தவா யிரங்க டாமே.
(இ-ள்.) அறிவன்
- சர்வக்கியனுடைய, கோயில் - ஸ்ரீ ஜிந
சைத்யாலயங்கள், அறுபது தலை வைத்திட்ட - அறுபது
என்கிற
கணக்கை முதலில் வைக்கப்பட்ட, மூன்று நூறு - முந்நூறாகும்,
(அதாவது முற்நூற்றறுபதாகும்), செறி - சேர்ந்திராநின்ற, சோலை
-
தோப்புகளும், குன்றம் - செய்குன்றங்களும், வாவியும் - குளங்களும்,
செப்பின் - சொல்லப்புகுந்தால், அன்ன
- முன்சொன்ன
அக்கணக்கையுடையனவேயாம், (அதாவது
: தனித்தனி
முந்நூற்றறுபதாம்), சேரி -
இடைச்சேரி முதலாகியவைகள்,
அறுபதிற்குணிக்கப்பட்ட வாயிரம் - அறுபதினாயிரமாகும், பாடி
-
பாடி என்னும் இடங்கள், அறுபதோடிசைந்தபத்தால் - எழுபதினாலே,
குணித்த - பெருக்கப்பட்ட,
ஆயிரங்கள் தாம் -
எழுபதினாயிரங்களாகும், எ-று.
(27)
28. அஞ்சுநூற் றிரட்டி வாயி லேழுநூ றாகும் பூழை
துஞ்சிலாப் பலிபெய் பீட மாயிரஞ் சதுக்க மன்ன |