130மேருமந்தர புராணம்  


 

     உரைசெய்தாள் சூதி லென்னோ டொப்பவ ரில்லை யென்றே
     அரசன்மந் திரியை நோக்க வகோபெரி தழகி தென்றான்.

     (இ-ள்.)     (அதன்மேல்      இராமதத்தை)      அரசனது -
இராஜாவினுடைய,   அருளினாலே   -  தயவினால், மந்திரியவனை -
மந்திரியாகியவனை  அந்த  ஸ்ரீபூதியை,  கூவி  -  அழைத்து, பெரிது
போது  -   நெடுநேரம்,   அசதியாடி  -  பரிஹாசவசனங்கள்  பேசி
அவனுடன்    விளையாடி,    பின்னை   -    பிற்பாடு,  ஒன்றை -
ஒருகாரியத்தை,      தொடங்கா     -     தொடங்கி,     சூதில் -
சொக்கட்டானாடுவதில்,    என்னோடு    ஒப்பவர்    -    எனக்குச்
சமானமானவர்கள்,  இல்லை  என்று  -  இவ்வுலகத்திலில்லை என்று,
உரை  செய்தாள் - சொன்னாள்,  அரசன் - அதைக்கேட்டு  அரசன்,
மந்திரியை - அமைச்சனாகிய  ஸ்ரீபூதியை, நோக்க - பார்க்க, (அவன்)
அகோ  -  ஆஹா, பெரிது  -  மிகவும்,  இது - இச்சொல், அழகு -
அழகாயிருக்கின்றது,   என்றான்   -   என்று    இகழ்ச்சிக்குறியாகச்
சொன்னான், எ-று.                                       (58)

 282. வரையெனச் செறிந்த மார்ப மந்திரி தன்னை வல்லே
     உரையொன்று முடியு மெல்லையுடைப்பனிப் போரி லென்னத்
     திரைசெறி கடலந் தானை வேந்தயான் றேவி தன்னைப்
     பொரவென்று பூட்டும் போழ்தே வெல்வனிப் போரி லென்றான்.

     (இ-ள்.)     (அதைக்கேட்டு     இராமதத்தை)    வரைஎன -
பர்வதம்போல, செறிந்த - சேர்ந்த,  மார்ப - மார்பையுடைய அரசனே!,
மந்திரி தன்னை - மந்திரியை,  வல்லே - சீக்கிரமாக, உரையொன்று -
ஒருவார்த்தையானது, முடியுமெல்லை - பேசிமுடிவதற்குள், இப்போரில்
- இச்சொக்கட்டான்   போரில்,   உடைப்பன்   -  தோல்வியடையச்
செய்வேன், என்ன - என்று சொல்ல, (மந்திரி) திரைசெறி - அலைகள்
நெருங்கிய,    கடலந்தானை   -    சமுத்திரம்போன்ற   பெரிதாகிய
சேனையையுடைய,  வேந்த - அரசனே!, யான் - நான், தேவிதன்னை
- இத்தேவியை, பொரவென்று - பொருதவென்று ஆரம்பித்து, பூட்டும்
போழ்தே - காய்களைப்   பூட்டும்   காலத்திலேயே,   இப்போரில் -
இந்தச்சூதாட்டப்  போரில்,  வெல்வன்  -  ஜெயிப்பேன்,  என்றான் -
என்று சொன்னான், எ-று.                                 (59)

 283. முறைமுறை சபதம் செய்ய வரசனும் முகிழ் முகிழ்த்துப்
     பிறைநுதற் பேதை தன்பா லிருந்தனன் றேவி பின்னை
     மறையவன் மார்பி னூலு நாமமோ திரமு மீறா
     முறைமுறை வென்றுகொண்டாள் மூர்ச்சியா வெய்து யிர்த்தான்.

     (இ-ள்.)  (இவ்வாறு)  முறைமுறை  -  ஒவ்வொரு  முறையிலும்
திரும்பத்திரும்ப, சபதம்  செய்ய  -  வாக்குறுதி செய்ய,  அரசனும் -
இராஜாவும்,  முகிழ் முகிழ்த்து - பிரமித்து, பிறைநுதல் - பிறைபோன்ற
நெற்றியையுடைய, பேதை