தன்பால் - தேவியின்பக்கத்து, இருந்தனன் -
இருந்தான், பின்னை -
பிற்பாடு, தேவி - இராமதத்தை, மறையவன் -
பிராமணனாகிய
மந்திரியினுடைய, மார்பினூலும் -
மார்பிலுள்ள பூணூலும்,
நாமமோதிரமும் - அவனது நாமங்குறித்த முத்திரை மோதிரமும்,
ஈறா - முடிவாக, முறைமுறை - வரிசைக் கிரமமாக இரண்டாட்டத்தில்,
வென்று - ஜெயித்து, கொண்டாள் - கைக்கொண்டாள், (அப்போது
மந்திரி) மூர்ச்சியா -
மூர்ச்சித்து, வெய்துயிர்த்தான் -
பெருமூச்சுவிட்டான், எ-று. (60)
284. மயிலொடு பொருது தோற்ற வாளரி போல மாழ்கிப்
புயலென மேனி வேர்ப்புப் பொடிப்பவ னிருந்த போழ்திற்
குயின்மொழி வென்று கொண்ட காட்டிச்செப் பதனை வாங்குஞ்
செயலெலாஞ் செவிலித் தாய்க்குச் செப்பிவிட்
டினிதின் மீண்டாள்.
(இ-ள்.) மயிலொடு
- ஒருபெண் மயிலோடு, பொருது -
எதிர்த்து, தோற்ற - தோல்வியடைந்த, வாளரிபோல் - ஒளிபொருந்திய
சிம்மத்தைப்போல, மாழ்கி -
மயக்கமுற்று, புயலென -
மழைத்துளியைப்போலத் துளித்துளியாக, மேனி - சரீரத்தில், வேர்ப்பு
- வேர்வை, பொடிப்ப - உண்டாகிச்சொரிய, அவன் - அம்மந்திரி,
இருந்தபோழ்தில் - இவ்வித நிலைமையிலிருந்த
காலத்தில்,
குயின்மொழி - குயில்போலும் மதுரவசனத்தையுடைய இராமதத்தை,
வென்று - சூதில் செயித்து, கொண்ட - கைக்கொண்டவஸ்துக்களை,
காட்டி - மந்திரியுடைய பாண்டாகாரிக்குக் காண்பித்து, செப்பதனை -
பத்திரமித்திரனது இரத்தினச்செப்பை, வாங்கும் - வாங்கும்படியான,
செயலெலாம் - செய்கை எல்லாம், செவிலித்தாய்க்கு
- தனது
செவிலித்தாயாகியவளுக்கு, செப்பி - சொல்லி (அப்பொருள்களை
அவள் கையிற்கொடுத்து), விட்டு - அவளை யனுப்பிவிட்டு, இனிதின்
- இனிமையாக, மீண்டாள் - திரும்பி அவ்விடத்திற்கே
வந்து
விட்டாள், எ-று. (61)
285. கரும்பைமென் றனைய தீஞ்சொற் காவலன் றேவி தாயாம்
நெருங்கிநின் றெழுந்த கொங்கை நிபுணமா மதியும் போகிச்
சுரும்பிருந் துறங்குந் தொங்க லமைச்சன்றன் மாடந் துன்னி
விரும்பிவந் தடைந்த பண்ட காரிக்கு வேறு சொன்னாள்.
(இ-ள்.) கரும்பை
- கரும்பினை, மென்றனைய - மென்று
தின்றதற்குச் சமானமாகிய, தீஞ்சொல் - மதுரமாகிய சொல்லையுடைய,
காவலன் தேவி - அரசனது தேவியின், தாயாம் - செவிலித்தாயாகிய,
நெருங்கிநின்று - சேர்ந்துநின்று, எழுந்த - மார்பினிடமாக வுண்டாகிய,
கொங்கை - தனபாரங்களையுடைய, நிபுண |