288. ஆதலா லென்க ணின்று முளைத்தவிப் பழியும்
போகி
ஒதநீர் வட்ட மெல்லாந் தடையின்றிப் படர்வ தொன்றாய்த்
தீதிலாக் குணத்து வேந்தே செப்பவன் வைத்துப் போயிற்
றியாதுநா னினைந்து டாதே யில்லைசெப் பென்று சொன்னேன்.
(இ-ள்.) ஆதலால்
- ஆகையினால், என்கணின்று -
என்னிடமாகவிருந்து, முளைத்த - உண்டாகிய, இப்பழியும் - இந்தப்
பழிச்சொல்லும், ஒன்றாய் - அவற்றைப்போல ஒன்றாகி,
போகி -
சென்று, ஒதநீர்வட்டமெல்லாம் - சமுத்திரஞ் சூழ்ந்த இப்பூமிமுழுதும்,
படர்வது - பரவப்பட்டதாயிற்று, தீதிலா -பொல்லாங்கில்லாத, குணத்து
- நற்குணமுடைய, வேந்தே - அரசனே!, செப்பு - இரத்தினச்செப்பை,
அவன் - அந்தப் பத்திரமித்திரன், வைத்துப் போயிற்று - வைத்துச்
சென்றதை, யாதும் - எவ்வளவும், நான் - யான், நினைந்திடாது
-
நினைப்பில்லாமல், செப்பு - இரத்தினச்செப்பு, இல்லை
என்று -
என்னிடம் வைத்ததில்லை என்று, சொன்னேன் - சொல்லிவிட்டேன்,
எ-று. (65)
289. நினைத்தபின் சத்தியகோட னென்பது நீங்கு மென்றென்
வினைப்பயன் பெருமை யாலே கொடுத்திலன் வேண்ட வன்றிச்
சினக்களிற் றுழவ மற்றுவன் றிருவுள்ள மிருக்க வையத்
தெனக்கொன்று மரிய தில்லை யினிச்செய்வ துரைக்க வென்றான்.
(இ-ள்.) நினைத்தபின்
- (அவன் செப்பு வைத்துச் சென்றதை)
நினைத்த பிற்பாடு, (அதனைக்கொடுத்தால் நாம் சொன்ன சொல்லுக்கு
மாற்றமாகி) சத்திய கோடனென்பது -
சத்தியகோஷனென்கிற
பெயரானது, நீங்குமென்று - நீங்கிவிடுமென்று, என் - என்னுடைய,
வினைப்பயன் பெருமையாலே - கருமோதயத்தின் பெருமையாலே,
வேண்ட - பத்திரமித்திரன் வேண்டிக்கேட்கவும், கொடுத்திலன்
-
நான் கொடுக்கவில்லை, அன்றி - அல்லாமல், சினக்களிற்றுழவ
-
கோபம் பொருந்திய யானையையுடைய
வீரனே!, உன் -
உன்னுடைய, திருவுள்ள மிருக்க - அழகிய உள்ளத் தயவிருக்க,
வையத்து - இவ்வுலகில், எனக்கு -
எனக்கு, அரியது -
அருமையானது, ஒன்றும் - யாதொன்றும், இல்லை - இல்லை, இனி
- இனிமேல், செய்வது - செய்யுங்
காரியத்தை, உரைக்க -
சொல்லக்கடவாய், என்றான் - என்று கூறினான், எ.று.
மற்று - அசை. (66)
290. மன்னவ னதனைக் கேட்டு வரும்பழி விலக்கொ ணாவே
என்னுனக் கிங்கு வந்த பழியொன்று மில்லை யீண்டம்
மின்மணிச் செப்பை யீந்தவ் வணிகனை வேண்டிக் கொள்வேன்
முன்னையென் பித்துத்தீர்த்தான் முனிவனென் றுரைக்க வென்றே. |