(இ-ள்.)
மன்னவன் - அரசன், அதனை - மந்திரியால்
சொல்லப்பட்ட அவ்வசனத்தை, கேட்டு -
கேட்டு, வரும்பழி -
உலகத்தில் வரும்பழியை, விலக்கொணாவே - நீக்கமுடியாது தான்,
(ஆயினும்) உனக்கு - நினக்கு, இங்கு
- இவ்வுலகில், வந்த -
வந்ததாகிய, பழி - பழிச்சொல், என் - என்ன,
ஒன்றுமில்லை -
யாதொன்றுமில்லை, ஈண்டு - இவ்விடத்து, அ - அந்த,
மின் -
பிரகாசமுடைய, மணி - இரத்தினங்களுள்ள, செப்பை - செப்பினை,
ஈந்து - கொடுத்து, அவ்வணிகனை - அந்த வணிகனை, (எனக்குப்
பித்துபிடித்திருந்ததனாலே நான் அவ்வாறு சொல்லிக்கொண்டு
திரிந்தேன்; அவ்விதம்) முன்னை -
முன்னாலே பிடித்திருந்த,
என்பித்து - எனது பைத்தியத்தை,
முனிவன் - ஒரு
மகாதபசையுடைய முனிவரன், தீர்த்தானென்று - (அருள் செய்து)
நீக்கினானென்று, உரைக்கவென்று - உலகில் சொல்லக்கடவாய்
என்று, வேண்டிக்கொள்வேன் - நான் வேண்டிக்கொள்ளுகிறேன்,
(அதனால் உனக்குப் பழியும் வராது உண்மைக்கும் சரியாய்விடும்
என்று அரசன் சொன்னான்), எ-று.
(67)
291. மந்திரி நன்றி தென்று வரைபுரை மார்பி னூலுந்
தன்பெய ரங்கித் திட்ட வாழியுந் தந்து செப்புக்
குன்கணின் றென்னை விட்டா னொருவரு மறியா வண்ண
மென்கையிற் செப்பைத் தாவென் றுரைத்துக்கொண் டினிதின் மீண்டாள்.
(இ-ள்.) மந்திரி
- மந்திரியானவன், நன்றிதென்று - இது
நன்மையான காரியமென்று, வரைபுரை - பர்வதம் போன்ற, மார்பின்
- தனது மார்பிலணிந்த, நூலும் - யஜ்ஞோபவீதமும், தன்பெயரங்கித்
திட்ட - தனது நாமத்தைப் பதித்த,
ஆழியும் - முத்திரை
மோதிரத்தையும், தந்து - அடையாளமாக உனக்குக் காட்டும்படி
கொடுத்து, உன்கண் - உன்னிடத்திரா நின்ற, செப்புக்கு - இரத்தினச்
செப்பை வாங்கி வருவதற்கு, இன்று -
இப்பொழுது, என்னை
விட்டான் - என்னை அனுப்பினான், ஒருவரும் - யாவரொருவரும்,
அறியாவண்ணம் - தெரிந்துகொள்ளாதபடி, என் கையில் -
எனது
கரத்தில், செப்பை - அந்த இரத்தினச்
செப்பை, தாவென்று -
தரக்கடவாயென்று (அவற்றைக் காட்டி), உரைத்து
- சொல்லி,
கொண்டு - வாங்கிக்கொண்டு, இனிதின் - சந்தோஷமாக, மீண்டாள்
- திரும்பி வந்துவிட்டாள், எ-று. (68)
292. மந்தித்த நோக்கத் தாலிம் மண்ணெலாம் வணக்க வல்லாள்
சிந்தித்தொன் றுரைத்துச் செய்யிற் றேவரும் பிழைக்க மாட்டார்
வந்திக்கா ரார்க்கு மூத்தான் வைத்தசெப் பதனை வாங்கித்
தந்திட்டாள் முகத்தை நோக்கா தாமரைக் கிழத்தி யன்னாள். |