(இ-ள்.)
மந்தித்த - மந்தமாகிய (அதாவது நிதானமாகிய),
நோக்கத்தால் - பார்வையினால், இம்மண்ணெலாம்
-
இப்பூமியிலுள்ளவர்களை எல்லாம், வணக்க - வசப்படுத்த, வல்லாள்
- வல்லமையையுடைய இவள், சிந்தித்து - மனதில் தியானித்து, ஒன்று
- தக்க ஒன்றை, உரைத்து -
சொல்லி, செய்யின் -
செய்வாளேயானால், தேவரும் - தேவர்களும், பிழைக்கமாட்டார்
-
இவளுடைய சூழ்ச்சியினின்றுந் தவறமாட்டார்கள்,
(ஆதலினால்)
வந்திக்காரார்க்கு மூத்தான் -
உலகத்தவரால் புகழத்தகாத
வஞ்சனைக்காரர்களுக்கெல்லா மேலானவனாகிய மந்திரியால், வைத்த
- வைக்கப்பட்ட, செப்பதனை - இரத்தினச் செப்பை,
வாங்கித்
தந்திட்டாள் - மேற்கூறியபடி வாங்கிக்கொண்டு வந்து இராமதத்தை
யிடம் கொடுத்துவிட்டாள், தாமரைக் கிழத்தியன்னாள் - செந்தாமரை
மலருக்குரியவளான லக்ஷ்மி தேவிக்குச் சமானமாகிய
இராமதத்தா
தேவியானவள், முகத்தை - செவிலித்தாயினுடைய
முகக்குறியை,
நோக்கா - பார்த்து, எ-று. (69)
293. முடிந்ததிக் கரும மென்னா முறுவலித் தவளோ டும்போய்ப்
படங்கிடந் தல்குற் பாவாய் பட்டது பகர்க வென்ன
நுடங்குநுண் ணிடையி னாய்நீ நுவலிய நினைத்துப் போகி
மடங்கல்போ லிருந்த விந்த மந்திரி மாடம் புக்கேன்.
(இ-ள்.) இக்கருமம்
- இந்தக் காரியமானது, முடிந்தது -
முடிந்துவிட்டது, என்னா -
என்று, முறுவலித்து -
புன்சிரிப்புக்கொண்டு, அவளோடும் - அச்செவிலித்தாயுடன், போய் -
தனியாகப்போய் (அவளைநோக்கி), படங்கிடந்த -
சர்ப்பத்தினது
படத்தின் உருவமைந்த, அல்குல் - அல்குலையுடைய, பாவாய்
-
சித்திரப் பாவைபோன்ற செவிலித்தாயே!,
பட்டது - நடந்த
விருத்தாந்தத்தை, பகர்கவென்ன - சொல்லக்கடவாயென்று
கூற,
(அவள் இராமதத்தையை நோக்கி) நுடங்கு - அசையாநின்ற, நுண் -
மெல்லிதாகிய, இடையினாய் - இடையை உடைய இராமதத்தையே!,
நீநுவலிய - உன்னால் சொல்லப்பட்டவைகளை,
நினைத்து -
மனதிலே ஆலோசித்துக்கொண்டு,
போகி - சென்று,
மடங்கல்போலிருந்த - சிம்மத்தைப்போ லிராநின்ற, இந்தமந்திரி
-
இம்மந்திரியினது, மாடம் - உப்பரிகையை, புக்கேன் - அடைந்தேன்,
எ-று.
கிடந்தல்குல் என்பதில் அகரந்தொக்கது.
(70)
294. புக்கபின் பாண்ட காரி புலியொப்பான் மெலியும் வண்ண
மொக்கநீ யுரைத்த வெல்லா முரைத்தடை யாளஞ் சொல்லி
மிக்கவன் வெகுளி மார்பி னூலுமோ திரமுங் காட்டித்
தக்கதொன் றுரைத்த பின்னைத் தந்தசெப் பிதுவென் றிட்டாள்.
(இ-ள்.) புக்கபின்
- அவ்வாறு அடைந்தபிறகு, பாண்டகாரி -
பாண்டகாரியான, புலியொப்பான் - புலிக்குச்
சமானமாகியவன்,
மெலியும் வண்ணம் - |