தளர்ச்சி யடையும்படி, ஒக்க -
பொருந்த, நீயுரைத்தவெல்லாம் -
உன்னால் சொல்லப்பட்டவைகளை எல்லாம், உரைத்து - சொல்லி,
அடையாளஞ்சொல்லி - அடையாளத்தையுங்கூறி, வெகுளிமிக்கவன் -
கோபமிகுந்த மந்திரியினுடைய, மார்பினூலும் -
மார்பிலணியும்
பூணூலையும், மோதிரமும் - முத்திரை மோதிரத்தையும், காட்டி
-
காண்பித்து, தக்கதொன்று - தகுதியானதொரு காரியத்தை, உரைத்த
பின்னை - சொன்ன பிறகு, தந்த - அவனால் கொடுக்கப்பட்ட, செப்பு
- செப்பானது, இது - இதுவாகும், என்று - என்று சொல்லி, இட்டாள்
- அச்செப்பை எதிரில் வைத்தாள், எ-று. (71)
295. கறந்த பாலு முலைபுகுநீ கருதி னென்று பெரியவர்க
ணிறைந்த மதிபோன் முகத்தாயை நிபுண மதியென் றுரைத்தார்க
வறிந்தோர் சொல்லும் பொய்யாமோ வறிய காலன் பாலுயிர்போ
லிறந்த பொருளைக் கொடுவந்தாய்க் கென்னான் செய்வ தென வுரைத்தாள்.
(இ-ள்.) (அவ்வாறு வைத்தபின்பு)
கறந்த - கறக்கப்பட்ட, பாலும்
- பாலும், நீ - நீ, கருதின் - கருதுவையேயானால்,
முலைபுகும் -
மறுபடியும் கொங்கையிலடையும், என்று - என்றுகூறி, (அதற்குத்தக)
பெரியவர்கள் - பெரியோர்கள், நிறைந்த - நிறைவுபெற்ற, மதிபோல் -
சந்திரன்போல், முகத்தாயை - முகத்தையுடைய உன்னை, நிபுணமதி
என்று - நிபுணமாமதி என்று, உரைத்தார்கள் -
சொன்னார்கள்,
அறிந்தோர் - ஞானத்தை உணர்ந்த பெரியோர்களது, சொல்லும்
-
வசனமும், பொய்யாமோ - பொய்யாகுமோ (ஆகாது),
வறிய -
வறுமையையுடைய (அதாவது எவ்வளவானாலும் நிரம்பாத
தொழிலையுடைய), காலன்பால் - அந்தியகாலனிடத்தே
சிக்கிய,
உயிர்போல் -
உயிரைப்போல, இறந்தபொருளை -
நீங்கிவிட்டபொருளை, கொடுவந்தாய்க்கு - மறுபடியும் கொண்டுவந்த
உனக்கு, நான் செய்வது - நான் செய்யத்தக்கது,
என் - என்ன
இருக்கின்றது, என - என்று, உரைத்தாள் -
இராமதத்தாதேவி
சொல்லினாள், எ-று. (72)
296. மந்தா ரத்தை வந்தணையும் வல்லி போல மன்னவனைச்
சந்தார் முலையாள் வந்தணுகித் தன்கைச் செப்புக் காட்டுதலுங்
கந்தார் களிற்று வேந்தன்றன் கையை மறியாக் காரிகையைச்
சிந்தா மணியோ நீயென்றான் சிறைவண் டெழுந்த முடியானே.
(இ-ள்.) மந்தாரத்தை
- கற்பக விருக்ஷத்தை, வந்தணையும் -
வந்து சேருகின்ற, வல்லிபோல் -
காமர்வல்லிக் கொடிபோல,
மன்னவனை - அரசனை, சந்தார் - அழகார்ந்த,
முலையாள் -
ஸ்தனங்களையுடைய இராமதத்தை, வந்தணுகி - வந்து |