சேர்ந்து, தன்கைச்செப்பு - தன்கைவசமாகக்
கொண்டுவந்த இரத்தினச்
செப்பை, காட்டுதலும் - (அவனிடம்) காண்பித்தலும்,
கந்தார் -
கல்ஸ்தம்பத்தில் பிணிக்கப்பட்டுச் சேர்ந்திருக்கும்படியான, களிற்று
-
யானைக்குத் தலைவனாகிய, வேந்தன் - அரசன், தன்கையை
-
தனதுகையை, மறியா - (அப்படியா வென்பதற்கடையாளமாக எதிரே
திருப்பி) அசைத்து, காரிகையை - இராமதத்தையை (பார்த்து), சிறை -
இறகுகளையுடைய, வண்டு - வண்டுகள்,
எழுந்த - புஷ்ப
மாலையினின்று மெழும்படியான, முடியான் - முடியையுடைய அரசன்,
நீ - தேவியேநீ, சிந்தாமணியோ -
(சிந்திதார்த்தங்களைக்
கொடுக்கும்படியான) சிந்தாரத்தினமோ, என்றான் - என்று சொல்லி
ஆச்சரியமடைந்தான், எ-று. (73)
வேறு.
297. மன்னவன் செப்பைக் காணா மற்றிவ னமைச்ச னாக
முன்னமென் னரசு சென்ற படியிதோ வென்று நக்காங்
கன்னமென் னடையி னாளை மந்திரித் தாக வென்னாச்
சொன்னவவ் வணிகன் றன்னைச் சோதித்தற் குள்ளம் வைத்தான்
(இ-ள்.) மன்னவன் -
அரசன், செப்பை - இரத்தினச்செப்பை,
காணா - பார்த்து, மற்று - பின்னை, இவன் - இந்த ஸ்ரீபூதியானவன்,
அமைச்சனாக - மந்திரியாக, முன்னம் - இதற்குமுன், என்அரசு
-
எனது ராஜ்ஜியம், சென்றபடி -
நடந்தவிதம், இதோவென்று -
இத்தன்மைத்தோவென்று, நக்கு - சிரித்து, ஆங்கு - அவ்விடத்தில்,
ஆக - நல்லதாகட்டும்,
என்னா - என்று, அன்னம் -
அம்சபக்ஷிபோன்ற, மெல் - மிருதுவாகிய,
நடையினாளை -
நடையையுடைய இராமதத்தா தேவியோடு, மந்திரித்து - ஆலோசித்து,
சொன்ன - (மந்திரி எனது
இரத்தினச் செப்பை மோசஞ்
செய்தானென்று) சொல்லிய, அவ்வணிகன்
றன்னை -
அவ்வர்த்தகனை, சோதித்தற்கு - பரீக்ஷிப்பதற்கு, உள்ளம் வைத்தான்
- (அவ்வெண்ணத்தை) மனதில் கொண்டான், எ-று.
(74)
298. மணிச்செப்பு நல்ல வல்லே தருகென வந்த வற்றிற்
குணிப்பற்ற மணியை வாங்கி வணிகன்றன் மணியிற் கூட்டிப்
பணித்தனன் வணிகன் றன்னை யழைக்கெனப் பணிந்து நின்றா
னிணைத்தநா வளைத்துச் சீறும் பன்னகர்க் கிறைவ வென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு
கருதிய அரசன்) மணிச் செப்பு -
இரத்தினச்செப்பு, நல்ல -
நன்மையானவைகளை, வல்லே -
சீக்கிரத்தில், தருகென -
கொண்டு வருவீராக வென்று,
(பண்டாகாரிகளுக்கு ஆஜ்ஞைசெய்ய), வந்தவற்றில் - அப்பிரகாரம்
அவர்களால் கொண்டுவரப்பட்ட அவைகளினின்றும், குணிப்பற்ற -
மதித்தற்கரிய, மணியை - இரத்தினங்களை,
வாங்கி - எடுத்து,
வணிகன்றன் - பத்திர |