மித்திரனுடைய, மணியில்
- இரத்தினங்களில்,
கூட்டி -
ஒன்றாகச்சேர்த்து, (அவ்வணிகனுடைய இரத்தினச்
செப்பையும்,
தன்னுடைய செப்புக்களையும் கலந்து
வைத்துக்கொண்டு),
வணிகன்றன்னை - அவ்வணிகனை,
அழைக்கென -
வரவழைக்கவென்று, பணித்தனன் - (பணியாளர்க்கு)
உத்தரவு
செய்தான், (அப்படியே அவர்கள் போயழைக்க அவன்
வந்து),
பணிந்துநின்றான் - அரசனை வணங்கி எதிரில் நின்றான், இணைத்தநா
- இரண்டாகிய நாக்களை, வளைத்து -
வளைத்து, சீறும் -
கோபிக்கின்ற, பன்னகர்க்கு, நாகர்களுக்கு (அதாவது
பவண
தேவர்களுக்கு), இறைவ - அதிபதியாகிய தரணேந்திரனே, என்றான்
- (கவனிப்பாயாக) என்று ஆதித்தியாப தேவன்
சொன்னான்,
எ-று. (75)
299. கச்சட்ட முலையி னாளும் வேந்தனும் வணிக கண்ட
விச்செப்பி லுன்செப் புண்டே லியம்புநீ யென்ன
லோடு
மெய்ச்செப்பு மொழியி னானும் வேந்தனை வணங்கிப் பாரா
விச்செப்பென் மணிச்செப்பென்றானெரிமணிக்கடகக் கையான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லி மேலும்
சொல்லத்தொடங்கினவனாய்)
கச்சு - இரவிக்கையை, அட்ட - மீறிஇராநின்ற, முலையினாளும்
-
ஸ்தனங்களையுடைய இராமதத்தையும், வேந்தனும் -
சிம்மஸேன
வரசனும், (அதன் மேல் அவ்வணிகனை நோக்கி)வணிக - வணிகனே!,
கண்ட - இவ்விடத்தில் நீபார்த்த, இச்செப்பில்
- இந்தச்
செப்புக்கூட்டங்களில், உன் - உனது, செப்பு - இரத்தினச்
செப்பு,
உண்டேல் - இருந்தால், நீ இயம்பு
- நீ அதைச் சொல்லு,
என்னலோடும் - என்று ஆஜ்ஞாபித்தவளவில், எரி - பிரகாசியாநின்ற,
மணி - இரத்தினங்களைப் பதித்துச்செய்த,
கடகம் -
கங்கணத்தையணிந்த, கையான் - கைகளையுடையவனாகிய, மெய் -
உண்மையையே, செப்பும் - சொல்லுகின்ற, மொழியினானும்
-
வசனத்தையுடைய பத்திரமித்திரனும், வேந்தனை -
அரசனை,
வணங்கி - நமஸ்கரித்து, பாரா - நன்றாகப்பார்த்து,
இச்செப்பு -
இந்தச்செப்பு, என் - என்னுடைய, மணிச்செப்பு - இரத்தினச்செப்பு,
என்றான் - என்று தன்னுடைய செப்பைக்கண்டுசொன்னான், எ-று.
300. உரைத்தவன் றன்னைப் பாரா மன்னன்முன் னிவனையோரும்
பிரத்தய மின்றி நின்றார் பித்தெனப் பித்த
னென்னா
வுரைத்தவென் னரசு சென்ற நிலத்தவ ருற்ற துன்பம்
மரக்கலத் தவர்க்கு நாய்கன் வாரியின் மடிந்த
தென்றான்.
(இ-ள்.) உரைத்தவன் றன்னை
- அவ்விதமாகச் சொல்லிய
பத்திரமித்திரனை, பாரா - பார்த்து, மன்னன் -
அரசன், முன் -
இதற்கு முன், இவனை - இவ்வணிகனை, ஒரும் - அறியும், பிரத்தயம்
- ப்ரத்தியமம், (அதாவது நல்லறிவு),
........... நின்றார் -
நிலைபெற்றிருந்தவர்கள், பித்தென - இவன் |