பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 139


 

பைத்தியக்காரனென்று  சொல்ல,  பித்தனென்னா - பைத்தியக்காரனே
என்று, உரைத்த - சொல்லிய, என் - எனது, அரசு . இராஜ்யாதிகாரம்,
சென்ற - நடந்த,  நிலத்தவர் - பூமியிலுள்ளவர்கள், உற்ற - அடைந்த,
துன்பம் - துக்கமானது,  மரக்கலத்தவர்க்கு - கப்பலிலுள்ளவர்களுக்கு,
நாயகன் - எஜமானானவன், வாரியின் - சமுத்திர ஜலத்திலே, மடிந்தது
- விழுந்து மடிந்ததற்குச் சமானமாகும், என்றான் - என்று சொன்னான்,
எ-று.                                                  (77)

 301. பத்திர மித்தி ராவுன் சித்திர மணிச்செப் பிட்ட
     முத்திரை யுன்ன தாகில் வைத்திடல் கொண்டு போக
     வத்திர முற்றி யானை மத்தக மறுக்கு மன்னா
     முத்திரை யென்ன தன்று வித்தக ரிட்ட தென்றான்.

     (இ-ள்.) (அவ்வாறு சொல்லி வணிகனை நோக்கி) பத்திரமித்திரா
-   பத்திரமித்திரனே!,   உன்  -  உனது, சித்திரம் - விசித்திரமாகிய,
மணிச்செப்பு -  இரத்தினச்செப்பில், இட்ட - வைக்கப்பட்ட, முத்திரை
-      அடையாள         முத்திரையானது,       உன்னதாகில் -
உன்னுடையதாயிருந்தால்,    வைத்திடல்   -    அதனை    இங்கே
வைத்திடாதே,  கொண்டுபோக  -  கொண்டுபோகக்கடவாய்,  (என்று
அரசன் சொல்ல) அத்திரம் - அம்புகளை, உற்று - கையிற் பொருந்தி,
யானை  -   யானைகளின்,  மத்தகம்  - மஸ்தகங்களை, அறுக்கும் -
பிளக்கின்ற,  மன்னா  -  அரசனே!,  முத்திரை  -  முத்திரையானது,
என்னதன்று - என்னதல்ல  (அதாவது நான் வைத்த அடையாளமல்ல),
வித்தகர் - யாரோசாமர்த்தியர்களால், இட்டது - இடப்பட்டிருக்கின்றது,
என்றான் - என்று வணிகன் சொன்னான், எ-று.

     ‘என்று    அரசன்    சொல்ல"    என்பது    இசையெச்சமாக
வருவித்துரைக்கப்பட்டது.                                  (78)

 302. திறவெனத் திறந்து பார்த்திட்
     டிறைவமற் றென்ன வல்லா
     வறிவரு விலைய கற்கண்
     ணிறையவுங் கிடந்த வென்றான்.

    (இ-ள்.)  (அதைக்கேட்டு  அரசன்)  திறவென  -  அச்செப்பைத்
திறக்கக்   கடவாயென்று   சொல்ல,   திறந்துபார்த்திட்டு  -  திறந்து
பார்த்துவிட்டு,  இறைவ  -  அரசனே!, என்ன  வல்லா - என்னுடைய
வல்லாதனவாகிய,   அறிவரும்   -  அளவிட்டறிதற்கரிய,  விலைய -
விலையையுடையனவாகிய, கற்கள்  -  இரத்தினங்கள்,   நிறையவும் -
செப்புநிறைய,   கிடந்த  - இராநின்றன,  என்றான் - என்று வணிகன்
சொன்னான், எ-று.

    மற்று - அசை.                                      (79)