140மேருமந்தர புராணம்  


 

 303. மண்ணின் மிக்கவிம் மணியைநின் மணியொடு கலக்கும்
     மண்ணை தானுள னோவறி யாதுநீ யுரைத்தாய்
     எண்ணி லாவிலை யிம்மணித் தன்மையைப் பார்க்ககுங்
     கண்ணு மோடின காணெனக் காவல னுரைத்தான்.

     (இ-ள்.)   மண்ணில்  -   இப்பூமியில்,   மிக்க  -  மிகுதியான
குணமுள்ள,  இம்மணியை -  இந்த  இரத்தினங்களை, நின்மணியொடு
-  உனது    இரத்தினங்களோடு,   கலக்கும்   -  சேர்க்கும்படியான,
மண்ணைதான்  -  அறிவில்லாதவன், உளனோ - உண்டோ, (இல்லை),
அறியாது - தெரியாமல்,  நீயுரைத்தாய் - நீ  சொல்லினாய், எண்ணிலா
- கணக்கில்லாத,  விலை  -  விலைமதிப்பையுடைய, இம்மணி - இந்த
இரத்தினங்களினது, தன்மையை - குணத்தை, பார்க்கும் - பார்க்கின்ற,
கண்ணும்   -   உன்னுடைய   கண்களும்,   ஓடின  -   பிரமித்துக்
குறிப்புத்தவறிப்போயின,   காண்  - இப்போது பயமில்லாமல் நன்றாக
நிதானித்துப்  பார்க்கக்கடவாய்,  என  - என்று, காவலன் - அரசன்,
உரைத்தான் - சொன்னான், எ-று.                          (80)

  304. மத்த னல்லவன் கருமத்தின் வரும்பயன் றெரிந்து
      சித்தம் வைத்தலாற் செய்வதோர் தொழில்வையத் தில்லை
      வைத்த வென்மணி மறந்துவை கலுமழைத் தேனேற்
      பித்த னென்றெனை யழைத்தவர் பிழைத்ததென் பெரியோய்.

     (இ-ள்.)  (அதைக்கேட்டு  வணிகன்)  பெரியோய்  -  மேலான
அரசனே!, மத்தனல்லவன் - பைத்தியமில்லாத  நன் ஞானமுடையவன்,
கருமத்தின் - காரியங்களினால்,  வரும் - வருகின்ற, பயன் தெரிந்து -
பலனைத்   தெரிந்து,  சித்தம்  -  மனதை,  வைத்தலால்  - வைத்து
ஆராய்ந்து  பார்த்தல்லாமல்,  செய்வது - செய்யும்படியான, ஓர் தொரி
- ஒரு  காரியம், வையத்து  -  இவ்வுலகில்,  இல்லை - இல்லையாம்,
(ஆதலின்),   வைத்த   -   வைக்கப்பட்ட,   என்மணி   -   எனது
இரத்தினங்களை, மறந்து  -  மறந்துபோய்,  வைகலும்  - நாடோறும்,
ழைத்தேனேல்     -      நான்     கூவினால்,     பித்தனென்று -
பைத்தியக்காரனென்று,  என்னை    -   என்றனை,  அழைத்தவர் -
சொன்னவர்கள், பிழைத்தது  -  செய்த  தப்பிதமானது, என் - என்ன
இருக்கின்றது  (இல்லை; அப்படியானால் நான் பித்தனேயாவன் என்று
கூறினான்), எ-று.                                         (81)

வேறு.

 305. இப்பரி சுரைத்துச் செப்பி லிட்டமா மணியை யெல்லாம்
     செப்பரும் பரிசு நீக்கிச் செழுமணி கையிற் கொண்டான்