மெய்ப்பரி சறிந்து
தன்மை கைக்கொண்டு பிறிது விட்ட
வப்பிர மத்த னாய முனியைப்போல் வணிக னின்றான்.
(இ-ள்.)
இப்பரிசு - இப்பிரகாரமாக, உரைத்து - சொல்லி,
செப்பில் - இரத்தினச் செப்பில், இட்ட
- வைக்கப்பட்ட, மா -
பெருமை பொருந்திய, மணியை எல்லாம் - இரத்தினங்களை எல்லாம்,
செப்பரும் - சொல்லுதற்கரிய, பரிசு - விதாயமாக, நீக்கி -
விலக்கி,
செழும் - செழுமைபெற்ற, மணி - தனது இரத்தினங்களை, கையில் -
தன்கையில், கொண்டான் - எடுத்துக் கொண்டான்,
(அதனால்),
மெய்ப்பரிசு - உண்மைத் தத்துவத்தை, அறிந்து - தெரிந்து, தன்மை -
தனது ஸ்வரூபத்தை, கைக்கொண்டு - உபாதேயமாகஸ்வீகரித்து, பிறிது
- அன்னிய ஸ்வரூபத்தை, விட்ட -
அஹயமாக நீக்கிய,
அப்பிரமத்தனாய - அப்பிரமத்தகுணமுடைய, முனியைப்போல்
-
முனிவரனைப்போல், வணிகன் - அவ்வணிகனான பத்திரமித்திரன்,
நின்றான் - நின்றான், எ-று. (82)
306. மணியிவை சிறிது பூதி வைத்தன வாகு முன்னைக்
குணியிலான் செய்த குற்றந் தீரநீ கொண்டி டென்ன
வணியிலா மகளிர் போலப் பிறன்பொருள் கொண்டு வாழும்
பணியிலே னரச வென்றான் பருமணி வயிரத் தோளான்.
(இ-ள்.) (அப்போது
அரசன்) மணி இவை -
இந்த
இரத்தினங்கள், சிறிது - கொஞ்சம், பூதி - ஸ்ரீபூதியினாலே, வைத்தன
வாகும் - வைக்கப்பட்டனவாகும், உன்னை - உன்றனை, குணியிலான்
- நற்குணனாயில்லாத அவன், செய்த - இவ்வாறு செய்த, குற்றம் தீர
- குறையானது நீங்கும்படி, நீ - நீ, கொண்டிடு
- (இவற்றைக்)
கைக்கொள்வாயாக, என்ன - என்று அரசன் சொல்ல,
பரும் -
பருத்த, மணி - அழகிய, வயிரத்தோளான் -
வஜ்ஜிரம் போல்
கெட்டியாகிய புயத்தையுடைய பத்திர மித்திரன், அரச - இராஜனே!,
அணியிலா - (நற்குணமில்லாத) அழகில்லாத,
மகளிர்போல -
பொதுஸ்திரீகளைப் போல, பிறன் - அன்னியனுடைய, பொருள்
-
பொருள்களை, கொண்டு - கைக்கொண்டு, வாழும் -
வாழ்கின்ற,
பணியிலேன் - தொழிலில்லாதவன் நான், என்றான்
- என்று
சொன்னான், எ-று. (83)
307. மன்னிய சுத்த மில்லான் பொருளினை வலிதின் வாங்கி
இந்நில வரைப்பி னென்றும் நின்றிடும் பழியு மெய்தி
மின்னினுங் கடிது வீயும் யாக்கையுங் கிளையு மோம்பல்
மன்னவ பெரிய தொன்றோ மக்களிப் பிறவிக் கென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லி
மேலும்) மன்னிய - நிலைபெற்றிரா
நின்ற, சுத்தம் - மனோசுத்தம்,
இல்லான் - இல்லாதவனாகி,
பொருளினை - பிறர் பொருள் |