சமவசரணச்சருக்கம்531


Meru Mandirapuranam
 

    சேர்வின் மற்று முரைத்தனன் சுந்தர
    மோரி னன்மதி யத்தினை யோதுமே.

   (இ-ள்.)   (வார் -   ரவிக்கைகள்,   மலி -  நிறைந்த, முலை -
ஸ்தனங்களையுடைய,  மாதர்  - தேவஸ்த்ரீகளுடைய,   நடங்களும் -
நர்த்தனங்களும்,  கார்மலி  - மேக  மண்டலத்தை அளாவி உயர்ந்து
நிறைந்த,   கதலிக்கொடி  -     த்வஜக்கொடிகளின்,   ஈட்டமும் -
திரள்களையும், சோர்வில் -  தளர்வில்லாத, மற்றும் - இன்னும் அந்த
ஸப்த பூமிகளிலுள்ள எல்லாவற்றையும், உரைத்தனன் - இதுவரையிற்
சொன்னேன்,    ஓரின் -  இனி  அறியுமிடத்தில், சுந்தரம் -  அழகு
வாய்ந்த,   நல் -   நன்றாகிய,  மதியத்தினை  -  ஸமவஸரணத்தின்
மத்தியஸ்தானமாகிய லட்சுமீ  வர மண்டபத்தின் ஸ்வரூபத்தை, ஓதும்
- சொல்லுவோம், எ-று. (80)

வேறு.

 1128. மகரவண் கொடியவன் றன்னை வென்றவன்
      நகரமுந் தனதிட மாக நாட்டியொண்
      புகரறு பொன்னெயி லாம்பொற் றாமரை
      சிகரமாந் திருநிலை யமைதி செப்புவாம்.

    (இ-ள்.)   (அவ்வாறு  சொல்லத் தொடங்கி முதலில்), மகரவண்
கொடியவன்றன்னை - வளப்பம் பொருந்திய மகரக் கொடியையுடைய
மன்மதனை,  வென்றவன்  -   ஜெயித்தவனாகிய   ஜினேந்திரனுக்கு,
நகரமும் - தங்கும்படியான நகரமும், தனதிடமாக  - இதனினிடமாக,
நாட்டி - தேவர்களால் செய்து,  ஒண் - ஒளி பொருந்திய , புகரறு -
களங்கமற்ற, பொன்னெயிலாம் -  பொன்னாலாகிய ஸமவஸரணமாகிற,
பொற்றாமரை -  பொன்னாலாகிய  அழகிய  தாமரை  மலரினுடைய,
சிகரமாம் -  சிகரமாகிய,  திருநிலை  -  ஸ்ரீநிலயத்தின்,  அமைதி -
அமைப்பையும், செப்புவாம் - சொல்லுவோம், எ-று. (81)

 1129. தேவர்கோன் றிசைதிசை கண்டு செப்பிய
      மூவுல கரசர்க ளாதி மூதுறை
      மேவிய விதனையான் விளம்ப லுற்றது
      நாவலர் நகுவதோர் வாயி லாகுமே.

   (இ-ள்.)  தேவர்கோன் - தேவேந்திரன், திசை திசை - திக்குகள்
திக்குகள்தோறும்,  கண்டு  -  பார்த்து,  செப்பிய  -  (இவ்விடத்தில்
இவ்விதமாகச் செய்யவேண்டுமென்று)   சொல்லி    நிருமிக்கப்பட்ட,
மூவுலகரசர்கள் -   தேவதானவமான   வேந்திரர்களுக்கு,   ஆதி -
முதல்வனாகிய ஆதிபத்தியத்தையுடைய ஜினேந்திரன்,