விரோதம், இன்று - இப்பொழுது, ஆய் - உண்டாகி,
நின்றதல்லால் -
அனுபவத்தில் நின்றதல்லாமல், மற்று - பின்பு,
இவன் செய்தது -
இம்மந்திரியால் செய்யப்பட்டது, உண்டோ - வேறொன்றுண்டோ,
(இல்லை; வினையின்படியே நடந்தது என்று சொன்னான்), எ-று. (86)
310. நீதிநூ லோது வான்போ னின்றவ னன்று சொன்ன
தீதிலா மொழியைக் கேளா திண்டிறற் சீய சேனன்
வேதவா ணிகனோ நீதி நூல்கண்ட வேந்த னோவிக்
கோதிலாக் குணத்தி னானென் றுவந்தன னிருந்துசொன்னான்.
(இ-ள்.) நீதிநூல்
- நீதி சாஸ்திரத்தை, ஒதுவான்போல் -
படிப்பவன்போல, நின்றவன் - நின்ற பத்திரமித்திரன், அன்று சொன்ன
- அப்பொழுது சொன்ன, தீதிலா - குற்றமில்லாத,
மொழியை -
வசனத்தை, கேளா - கேட்டு, திண் - வலிமை பொருந்திய, திறல் -
பராக்கிரமத்தையுடைய, சீயசேனன் -
சிம்மஸேனமகாராஜன்,
(அவனைநோக்கி), வேதவாணிகனோ
-
வேத
சாஸ்திரவர்த்தகஞ்செய்கின்றவனோ; (அல்லது) நீதிநூல்
-
நீதிசாஸ்திரத்தை, கண்ட - கரைகண்ட, வேந்தனோ - முதல்வனாகிய
அரசனோ, இக்கோதிலா - இந்தக்குற்றமில்லாத, குணத்தினான்
-
நற்குணத்தையுடையவன், என்று - என்று புகழ்ந்து, உவந்தனன்
-
சந்தோஷித்தவனாய், இருந்து - தங்கி,
சொன்னான் - மேலும்
(கீழ்க்கண்டவாறு) சொன்னான், எ-று. (87)
311. வையகம் பெறினும் பொய்யா வாக்கினன் மரணம் வந்தா
லுய்யலா மருந்தென் றாலும் பிறன்பொருட் குள்ளம் வையான்
தையலாய் தரும நீதி சமநிலை தயா வொழுக்கம்
வையகந் தன்னி லிந்த வணிகனாய் வந்த வென்றான்.
(இ-ள்.) வையகம்
பெறினும் - இந்தப் பூமி ராஜ்ஜியத்தை
அடைவதாயினும், பொய்யா - பொய் சொல்லாத,
வாக்கினன் -
வசனத்தை யுடையவன், மரணம் வந்தால் -
சாவுவந்த போது,
உய்யலாம் - பிழைக்கும்படியான, மருந்தென்றாலும் -
அவுஷத
மென்றபோதிலும், பிறன் பொருட்கு - அன்னியனுடைய பொருளுக்கு,
உள்ளம் - மனத்தில் ஆசையை, வையான் -
வைக்கமாட்டான்,
தையலாய் - இராமதத்தையே!, தருமநீதி - தருமநீதியும், சமநிலை
-
சமதநிலைமையும், தயா - தயவும், ஒழுக்கம் -
நன்னடக்கையும்,
வையகந் தன்னில் - இந்த வுலகத்தில், இந்த வணிகனாய்
- இந்த
வணிகனாக ரூபமெடுத்து, வந்த - வந்தனவாகும், என்றான் - என்று
இராமத்தையை நோக்கிக் கூறினான், எ-று.
(88)
312. என்றலும் தேவி வென்ற வாதிதன் பக்கத் தார் போல்
நின்றன ளுவகை நெஞ்சி னிறைந்தன ளாக நீதிக் |