144மேருமந்தர புராணம்  


 

     கொன்றவப் பூதி தன்பால் கோன்செட்டிப் பட்டந் தன்னை
     மன்றுலாந் தொங்கல் வேந்தன் வணிகனுக் கீந்து சொன்னான்.

     (இ-ள்.)   என்றலும்   -   என்று அரசன் சொல்லவும், தேவி -
இராமதத்தா     தேவி,    வென்ற    -    ஜெயித்த,   வாதிதன் -
வழக்காளியினுடைய, பக்கத்தார்போல் - கக்ஷியிலுள்ளவர்களைப்போல,
நெஞ்சில்   -   மனதில்,   உவகை - சந்தோஷம்,  நிறைந்தனளாக -
நிறையப்பெற்றவளாக,  நின்றனள் - நின்றாள், நீதி - நீதியை, கொன்ற
- கெடுத்த, அப்பூதி தன் பால் - அந்த ஸ்ரீ பூதியினிடத்துள்ள, கோன்
செட்டிப்பட்டந்  தன்னை - இராஜஸ்ரீஷ்டி  பட்டத்தை, மன்றுலாம் -
வாசனை   பரவிக்கொண்டிருக்கின்ற,  தொங்கல்  -  புஷ்பமாலையை
யணிந்த,  வேந்தன்  -  அரசன், வணிகனுக்கு -  பத்திரமித்திரனுக்கு,
ஈந்து  -  கொடுத்து,  சொன்னான்  -  (மேலும்  அவனை  நோக்கிக்
கீழ்க்கண்டவாறு) சொல்லினான், எ-று.                       (89)

 313. மணிகளும் பொன்னும் முத்தும் வயிரமும் பிறக்கும் பூமி
     மணிகளும் பொன்னும் முத்தும் வயிரமு மடக்கு மாடம்
     மணிகளும் பொன்னும் முத்தும் வயிரமும் வடித்துச் செய்த
     வணிகளும் துகிலும் சந்து மல்லவுங் கைக்கொ ளென்றான்.

     (இ-ள்.)   மணிகளும்    -   இரத்தினங்களும்,   பொன்னும் -
ஸ்வர்ணமும்,     முத்தும்     -    முத்துக்களும்,      வயிரமும் -
வஜ்ஜிரரத்தினங்களும், பிறக்கும்  -  உண்டாகும், பூமி - பூமிகளையும்,
மணிகளும்  -  இரத்தினங்களையும்,  பொன்னும்  - ஸ்வர்ணத்தையும்,
முத்து   -  முத்துக்களையும்,  வயிரமும்  -  வஜ்ஜிரக்  கற்களையும்,
அடக்கும்  -  தனக்குள்   அடக்கிக்   கொண்டிருக்கின்ற,  மாடம் -
உப்பரிகை    பாண்டாகார    முதலானவைகளையும்,   மணிகளும் -
இரத்தினங்களாலும்,  பொன்னும்   -  ஸ்வர்ணத்தினாலும், முத்தும் -
முத்துக்களாலும்,   வயிரமும்  -  வஜ்ஜிரரத்தினங்களாலும்,  வடித்துச்
செய்த - ஆராய்ந்தெடுத்துப்  பதித்து வடிவுபெறச் செய்த, அணிகளும்
- ஆபரணங்களையும்,  துகிலும் - பட்டு வஸ்திரங்களையும், சந்தும் -
சந்தன     முதலாகிய    வாசனதிரவியங்களையும்,     அல்லவும் -
இவையல்லாதனவாகிய   மற்ற   அனேக   இனிய வஸ்துக்களையும்,
(திருடர்களையேவி   மந்திரியால்   அபகரிக்கப்பட்ட   உன்னுடைய
பொருள்கள்      எல்லாவற்றையும்),     கைக்கொள்     -     நீ
கைக்கொள்ளக்கடவாய்,   என்றான்  -  என்று ஆஜ்ஞாபித்துத் தன்
காரியஸ்தர்களைக்   கொண்டு   அவற்றையெல்லாம்    அவனுக்குக்
கொடுக்கும்படி செய்தான், எ-று.                           (90)

வேறு.

 314. இடம்பெரி துடையவர் பழியில் காரியந்
     தொடங்கிய முடித்தலால் விடார்க ளென்பது
     மடங்கல்போ னின்றிந்த வணிகன் மந்திரி
     இடஞ்சலைக் கடந்திது முடிந்த தென்றனர்.