146மேருமந்தர புராணம்  


 

போன்ற   மனதையுடையவர்கள்   (அதாவது  தீபம்போல  பிரகாசம்
பொருந்திய  மனமுடையவர்கள்),  நாபி  காலத்தின் - போக பூமியில்
நாபி மகாராஜன்   ஆள்கையின்   காலத்திற்கு,  இப்பால்  -  பிறகு,
(அதாவது  கருமபூமியானது  முதல்),  நடக்கின்ற  - நடைபெறுகின்ற,
வழக்கு  -  வழக்கமாகிய  சட்டத்தில்,  செய்வது  -  செய்யக்கூடிய
காரியத்தை,  தெரிந்து  -  அறிந்து,  சொன்னார்  -  கீழ்க்கண்டவாறு
சொன்னார்கள், எ-று.

    நாபி   மகாராஜன்   கால   முதலான  காலவேற்றுமைகளையும்,
அப்போது  இந்த  க்ஷேத்திரம்  போகபூமியான தன்மையையும், பிறகு
கர்மபூமியான   விவரங்களையும்   ஸ்ரீ  புராணத்தில் விருஷபஸ்வாமி
புராணப் பகுதியில் பார்த்துக்கொள்க.                        (93)

 317. மடித்துவாய் கடித்து மல்லர் முப்பது சவட்டை திண்டோ
     ளெடுத்திடா வடித் தெருத்தின் சாணமுத் தாலந் தீற்றிப்
     படைத்தமா டனைத்துங் கொண்டிட் டிப்பதி நின்றும் போக
     வடித்தலாந் தண்ட மென்றா ராசனப் படிச்செய் கென்றான்.

     (இ-ள்.)  மல்லர்  -  மல்லர்கள்,  வாய்மடித்து - வாயைமடித்து,
கடித்து    -    பயங்கரமாகக்    கடித்துக்கொண்டு,   திண்தோள் -
வலிமையாகிய   கைகளால்,  எடுத்திடா  -  தூக்கி,  சவுட்டைமுப்பது
அடித்து - சவட்டை அடியால் முப்பது அடிகளை அடித்து, எருத்தின்
- எருதினது, சாணம் - சாணியை,  முத்தாலம் - மூன்று சட்டி, தீற்றி -
தலைமேலூற்றி,    படைத்த    -    அவனால்   சம்பாதிக்கப்பட்ட,
மாடனைத்தும்  -  பொன்களெல்லாவற்றையும்,  கொண்டிட்டு  - நாம்
கைக்கொண்டு,  இப்பதி  நின்றும் - இப்பட்டணத்தினின்றும், போக -
அவன்  குடியில்லாமல் நீங்கிப்போகும்படியாக, அடித்தல் - அடித்துத்
துரத்திவிடுதல்,  தண்டம் ஆம்  -  சிக்ஷை ஆகும், என்றார் - என்று
சொன்னார்கள்,  அரசன்  -  இராஜனானவன்,  அப்படிச்   செய்க -
அந்தப்  பிரகாரமே  செய்வீராக, என்றான்  -  என்று பணியாளர்க்கு
ஆஜ்ஞாபித்தான், எ-று.                                   (94)

 318. குனிசிலைக் கடவுள் போலும் கொற்றவன் குறிப்பை நோக்கா
     பணையின்வெஞ் சிலைக ளேந்திப் பாடிகாப் பார்கள் சூழ்ந்தார்
     நினைவரும் பெரிய செல்வம் நினைப்பதன் முன்னம் நீறாய்ப்
     பனியின்முன் மலர்ந்த செந்தா மரைத்தடம் போன்ற தன்றே.

     (இ-ள்.)  குனி  -  வளைந்த,  சிலை  - கரும்புவில்லையுடைய,
கடவுள்போலும்   -  மன்மதன்போலு  மழகையுடைய,  கொற்றவன் -
அரசனது,  குறிப்பை  -  மனோவபிப்பிராயத்தை, நோக்கா - பார்த்து,
பணையின்  -  திரளாக,  வெம்  -  வெவ்விதாகிய, சிலைகள் - வில்
முதலியவைகளை,  ஏந்தி   -   கையில்  தாங்கி,  பாடிகாப்பார்கள் -
சேனையைக்காக்கும்    தலைவர்கள்,    சூழ்ந்தார்   -   அவ்விடம்
சேர்ந்தார்கள், நினை