வரும் - நினைத்தற்கரிய, பெரிய
- பெரியதாகிய, செல்வம் -
மந்திரியின் செல்வமெல்லாம், நினைப்பதன் முன்னம் -
அவ்வாறு
அழிக்க எண்ணுவதற்கு முந்தியே, நீறாய் - பஸ்பமாகி, (அதாவது
ஒன்றுமில்லாமல்), பனியின் முன் - பனியினது எதிரில்,
மலர்ந்த -
புஷ்பித்த, செந்தாமரைத்தடம் போன்றது -
சிவந்ததாமரைத்
தடாகத்துக்குச் சமானமானது, எ-று.
(95)
319. மலைமிசைச் சிங்க வேற்றை வருத்துமான் கன்று போலத்
தலைமிசைச் சவட்டையிட்டுச் சரணகந் தீற்றி யிட்டார்
புலையர்சென் றவனைச் சூழ்ந்து போகென வுரைப்பச்
சுற்ற
மலைகடற் கவிழ நாவா யவருற்ற துற்ற தன்றே.
(இ-ள்.) (மேற்கூறியபடி
சூழ்ந்தவர்கள்) மலைமிசை - பருவத்தின்
மேலே, சிங்க ஏற்றை - ஆண்சிங்கத்தை, வருத்தும் - வருத்துகின்ற,
மான்கன்றுபோல - மான் குட்டிகைளைப்போல, சவட்டையிட்டு
-
சவட்டையடித்து, தலைமிசை - அவனது தலையின்மேல், சாணகம் -
சாணிக்குழம்பை, தீற்றியிட்டார் - ஊற்றினார்கள்,(அதன்மேல்) புலையர்
- கீழ்மக்கள், சென்று - சமீபத்திற் சென்று, அவனைச்
சூழ்ந்து -
அவனை வளைந்து, போகென - நீ இந்நகரத்தை
விட்டுப்
போகக்கடவாயென்று, உரைப்ப - சொல்ல, (அவன்
அவ்வாறே
சென்றான்; அப்போது) சுற்றம் - அவனுடைய பந்துக்கள், அலைகடல்
- அலைகளையுடைய சமுத்திரத்தில், நாவாய் - கப்பல்,
கவிழ -
கவிழ்ந்துபோக, அவர் - கப்பலிலுள்ளவர்கள், உற்றது - அடைந்த
துன்பத்தைப்போன்ற துன்பத்தை, உற்றது - அடைந்தார்கள்,
எ-று.
‘போகென" என்பதில் அகரந் தொக்கது.
(96)
320. முன்பகற் றேவ னென்று மொய்த்துடன் புகழப் பட்டான்
பின்பகற் பேய னென்று பின்செலா திகழப் பட்டான்
அன்புறு மிளமை மூப்பி லரிவையர்க் கொருவ னொத்தான்
முன்புதான் செய்து வந்த விதிமுறை யுதயத் தாலே.
(இ-ள்.) (அப்போது)
முன்பு - பூருவத்தில், தான் செய்துவந்த -
தன்னால் செய்யப்பட்டு வந்த, விதிமுறை -
விதிக்கிரமத்தின்,
உதயத்தாலே - தோற்றத்தினாலே, முன்பகல்
- காலையில்,
(இராஜசபைக்குப் போகும்போது), தேவனென்று
- இவனே
தெய்வமென்று, மொய்த்து -
ஜனங்கள் நெருங்கி, உடன்
அப்பொழுதே, புகழப்பட்டான் -
அவர்களால் புகழ்ச்சி செய்யப்பட்டவனாகிய மந்திரி,
பின்பகல் - அம்மாலையில்,
பேயனென்று - பேய்க்குச் சமானமானவன் (அதாவது புத்தி நிலை
இல்லாதவன்) என்று, பின் - அவனுக்குப் பின்னே,
செல்லாது -
ஒருவருஞ் செல்லாமல், இகழப்பட்டான் - அவர்களாவிகழ்ச்சி பண்ணப் |