326. மோக மேநிறை யாநிறை யாயது 
             மோக மேமூ வுலகின் வலியது 
             மோக மேமுனி மைக்கிடை யூறது 
             மோக மில்லவர் நல்ல முனிவரே.  
           (இ-ள்.) மோகமே - ஆசையே, 
        நிறையா - ஒருகாலும் நிரம்பாத, 
        நிறையாயது - அளவையுடையது, மோகமே - ஆசையே, மூவுலகின் - 
        மூன்றுலோகத்திலும்,  வலியது - பலம்  பொருந்திய பொல்லாங்கினை 
        யுடையது,   மோகமே  -  ஆசையே,  முனிமைக்கு   -  
        முனீஸ்வரர் 
        தன்மையினுக்கு,   இடையூறது   -   விக்கின  காரியாயிரா 
         நின்றது, 
        மோகமில்லவர்  -  ஆசையில்லாதவர்கள், நல்ல - நன்மையையுடைய, 
        முனிவரே - முனிசிரேஷ்டர்களாவார்கள், எ-று.               (103) 
       
       327. மேகம் வில்லொடு வீந்தது போலவே 
             போக மும்கிளை யும்பொரு ளுங்கெடச் 
             சோக மும்துய ரும்துணை யாகவன் 
             னேக நின்றவ ரின்ன வியம்பினார்.  
           (இ-ள்.)  (இது   நிற்க) 
        மேகம்  -  மேகமானது,  வில்லொடு - 
        இந்திரதனுசோடு,  வீந்ததுபோல  -  அழிந்து மறைந்து போவதுபோல, 
        போகமும்  -  தனது போகமும், கிளையும் - பந்துக்களும், பொருளும் 
        - ஜஸ்வரியமும்,  கெட  -  நீங்க,  சோகமும்  -  
        மனோவருத்தமும், 
        துயரும்  -  துன்பமும், துணையாக  -  தனக்குத்  துணையாகச் 
        சேர, 
        அவன்  -  அம்மந்திரியானவன், ஏக - (மேற்கூறியபடி)  பட்டணத்தை 
        விட்டுப்போக, நின்றவர்  -  அக்காலத்தில் நின்ற ஜனங்கள், இன்ன 
        - 
        இத்தன்மையான    வார்த்தைகளையே,   (அதாவது   மேற்கவிகளிற் 
        சொன்னவைகளை), இயம்பினார் - சொன்னார்கள், எ-று.  
           ஆகவன் என்பதில் அகரந்தொக்கது. 
                          (104) 
       
       328. அங்கு நின்றவ னேகலு மாயிடைச் 
             சங்கை தன்முறை யென்று தழுவலு 
             மெங்கும் வந்திரு ளாய திடர்க்கட 
             னுங்கி னானொடி யும்நெடி தாயதே.  
           (இ-ள்.) (அதன்  மேல் 
         முன்  கூறியபடி துரத்தப்பட்டு) அங்கு 
        நின்று - அந்நகரத்தினின்றும்,  அவன் - அம்மந்திரியானவன், ஏகலும் 
        - நீங்கிப்போதலும்,     ஆயிடை    -    
        அப்பொழுது,   சங்கை - 
        மனச்சங்கையானது  (அதாவது   பயமானது),   தன்முறை   என்று 
        - 
        அவனிடத்தே  நீங்காமல்  இருக்கவேண்டியது  தன்னுடைய  முறமை 
        என்று, தழுவலும் - அவனிடத்தே  வந்து சேர்தலும், எங்கும் வந்து -   |