அதனால் அவனுக்கு
எவ்விடங்களினும் வந்து (அதாவது
பொறிபுலன்களிலெல்லாம் சேர்ந்து), இருளாயது -
அந்தகாரம்
நிறைந்துவிட்டது, (அதாவது அஞ்ஞானமாகி விட்டது அங்ஙனமாகவே
அவன்), இடர்க்கடல் - துக்கமாகிற சமுத்திரத்தில், நுங்கினான்
-
முழுகினான், நொடியும் - ஒரு நொடிப் பொழுதும், நெடிதாயது
-
அவனுக்கு நீண்டகாலமாகத் தோற்றியது, எ-று.
சங்கை என்பதனை மூதேவி என்றும்
சிலர் கூறுவர். (105)
329. மதலை மாடமும் மன்னிய செல்வமுங்
குதலை மென்மொழி யாரையும் நீத்தவன்
விதலை கொண்டு விழுந்தனன் வேந்தன்மேல்
முதல தாகிய வேரம் முளைத்ததே.
(இ-ள்.) (அவ்வாறாகவே)
மதலை - துண்களையுடைய, மாடமும்
- மாளிகையையும், மன்னிய -
சேர்ந்திராநின்ற, செல்வமும் -
ஐஸ்வரியத்தையும், குதலை - மழலை பொருந்திய,
மெல் -
மிருதுவாகிய, மொழியாரையும் -
வசனத்தையுடைய
ஸ்திரீமார்களையும், நீத்து - நீங்கி,
அவன் - அம்மந்திரி,
விதலைகொண்டு - நடுக்கங்கொண்டு, விழுந்தனன்
- மூர்ச்சித்து
விழுந்தான், (அப்பொழுது) முதலதாகிய - அவனுக்கு முதன்மையாகிய,
வேரம் - வைரபாவமாகிய அனந்தானு பந்திக்குரோத பரிணாமம்,
வேந்தன்மேல் - அரசன்பேரில், முளைத்தது
- தன் மனதில்
பாவகர்மமாக உண்டாகி அதனால் திரவியகர்மம்
ஆத்மனோடு
பந்தித்தது, எ-று.
(106)
330. என்று தானிவை யெய்துவ தென்றெழா
நின்ற வார்த்தத்தி னீடிய வாயுளுங்
குன்ற வந்து விலங்கினு ளாயுக
மன்று கட்டிய தாயுவு மற்றதே.
(இ-ள்.) (மேலும் அவனுக்கு)
என்று தான் - எப்பொழுது தான்,
இவை எய்துவது - நாம் அடைந்திருந்த
இத்தன்மையான
ஐஸ்வரியங்களை அடைவது, என்று - என்று, எழாநின்ற - மனத்தில்
உண்டாகாநின்ற, அர்த்தத்தின் -
இஷ்ட வியோகாதி
ஆர்த்தத்தியானத்தால், நீடிய -
பெரிதாகிய, ஆயுளும் -
மனுஷ்யாயுஷ்யமும், குன்ற - குறைய, விலங்கினுள் ஆயுகம் வந்து -
திரியக்கதியாயுஷ்யமானது ஆஸ்ரவித்து, அன்று - அப்பொழுது,
கட்டியது - அவனைப் பந்தித்தது, ஆயுவும் - மனுஷ்யாயுஷ்யமும்,
அற்றது (அவனுக்கு) நீங்கிவிட்டது, எ-று. (107)
வேறு.
331. மிக்கு நின்றெறி விளக்கு வீந்துழி
அக்க ணத்திரு ளடையு மாறுபோல் |