154மேருமந்தர புராணம்  


 

 336. மீன்சென்ற நெறியைப் போலும் விரும்பினார் வேட்கை யாதி
     தான்சென்ற மனத்து மள்ளர் தாம்பொரு ளதனுக் காகக்
     கான்சென்ற நெறியின் மன்றிற் சுருங்கையிற் களவு நூலின்
     கூன்கொண்டு கொள்ளை கொள்ளல் காரணக் களவு தானே.

     (இ-ள்.)  வேட்கையாதி  சென்ற  -  பொருளாசை  முதலியவை
நிறைந்து போய்க் குடியேறிய (அதாவது பொருளாசை மிகுந்த), மனத்து
- மனத்தையுடைய, மள்ளர் தாம் படர்களானவர்கள், பொருளதனுக்காக
- பொருள்  சம்பாதித்தற்காக, விரும்பினார் - இச்சித்தவர்களாகி, மீன்
சென்ற  நெறியைப்  போலும்  -  ஜலத்திலே  மஸ்ஸியமானது சென்ற
வழியை நிகர்த்த (அதாவது மீன் சென்ற வழியானது எப்படிப் பிறரால்
கண்டுபிடிக்க    முடியாமல்    போகிறதோ   அதுபோல   பிறரால்
கண்டுபிடிக்க   முடியாதபடி   அமைந்திருக்கின்ற),  கான்  சென்ற -
காட்டில் சென்ற,  நெறியின் - கள்ளமார்க்கங்களின் வழியாக, (போய்),
மன்றில் - வெளியிலே (இருந்து தோண்டப்பட்ட),     சுருங்கையின் -
கன்னவாயிலென்னும்   கள்ள   வழியாக,  களவு  நூலின்  -  சோர
சாஸ்திரத்தின்படியே,  கூன்  கொண்டு  - வளைந்தொடுங்கி  உள்ளே
நுழைந்து, (அத்திரசியாஞ்சனம்,  நித்ரோத்பாதனம்,  தாளோத்காடனம்
முதலிய  மறைவுகளையும்   ஆயுதங்களையுங்கொண்டு)   கொள்ளை
கொள்ளல் - பலவிதமான  பொருள்களை அபகரிப்பது, காரணக்களவு
- காரணங்களவாகும், எ-று.                               (113)

337.பொருளினைப் போக்குஞ் சீர்த்தி தன்னொடும் புகழைப் போக்கும்
     அருளினைப் போக்குஞ் சுற்றந் தன்னொடு வாயு போக்கும்
     பெருமையைப் போக்கும் பேறு தன்னொடு பிறப்பைப் போக்குந்
     திருவினைப் போக்கும் தேற்றந் தன்னொடு சிறப்பைப் போக்கும்.

     (இ-ள்.)  (மேற்கூறிய   களவானது    அதைச்   செய்வாரின்)
பொருளினை   -   ஐஸ்வரியத்தை,   போக்கும்  - (‘திருட்டுடைமை
உருட்டிக்கொண்டு  போகும்"  என்ற  பழமொழிக்கிணங்க) இல்லாமற்
போக்கிவிடும்,   சீர்த்தி   தன்னொடு   -   அழகுடனே,  புகழை -
கீர்த்தியையும்,  போக்கும் - போக்கடிக்கும்,  அருளினைப் போக்கும்
- தயவையும்  நீக்கும்,  சுற்றம்  தன்னொடு - பந்துக்களுடனே, ஆயு
- ஆயுஷ்யத்தையும்,  போக்கும் - நீக்கும்,  பெருமையை - மேலான
தன்மையை,  போக்கும் - நீக்கும்,  பேறு தன்னொடு - இலாபத்தோடு,
பிறப்பை -  நற்கதியில்  பிறக்கும்  பிறப்பையும், போக்கும் - நீக்கும்,
திருவினை  -  லக்ஷ்மியை, போக்கும் - நீக்கும், தேற்றந்தன்னொடு -
தெளிவொடு,  சிறப்பை   -   பலரால்   பூசிக்குந்    தன்மையையும்
(அதாவது ஞானத்தையும்), போக்கும் - நீக்கும், எ-று.         (114)

338. அங்கத்தைக் களைந்து வீழ்க்கு மருஞ்சிறைப் பிணியை யாக்கும்
     வங்கயத் தடியின் வீழ்க்கும் வெந்நுனைக் கழுவி னேற்றிக்