பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 155


 

     தொங்குவித் தொழியுந் தூண்டிற் றோலினை யுரிக்கப் ண்ணும்
     கொங்கையைக் குறைக்கு மங்கைக் கண்ணினைக்                                                        குடையப்பண்ணும்.

     (இ-ள்.)  அங்கத்தை - சரீரத்தின்  பிரதானமான அங்கங்களை,
களைந்து   -   சேதித்து,   வீழ்க்கும்   -  விழப்பண்ணும், அரும் -
அரிதாகிய,  சிறை - நீங்காமையான, பிணியை - வியாதியை, ஆக்கும்
- (அவர்களுக்கு)   உண்டுபண்ணும்,    வெம்    -   வெவ்விதாகிய
கோபத்தையுடைய,  கயத்து  -  யானையின்,  அடியின்  - பாதத்தின்
கீழ்,  வீழ்க்கும் - (அவர்களை) வீழ்விக்கும்,  வெம் நுனை - வெப்பம்
பொருந்திய   நுனியையுடைய,   கழுவின்   -   கழுவிலே,  ஏற்றி -
ஏற்றுவித்து,  தூண்டில்  -  தூண்டிலைப்போல (அதாவது : தூண்டில்
முள்ளில்  அகப்பட்ட  மீனைப்போல), தொங்குவித்து - தொங்கும்படி
செய்து,  ஒழியும் - நீங்கும், தோலினை - (அவர்களுடைய) உடம்பின்
தோலை,  உரிக்கப்பண்ணும்   -   உரிக்கும்படி  செய்யும், மங்கை -
திருடும்   ஸ்திரீகளின்,   கொங்கையை  - தனங்களை, குறைக்கும் -
குறைப்பிக்கும்,   கண்ணினை - நேத்திரத்தை,   குடையப்பண்ணும் -
ஆயுதமிட்டுக் குடையும் படியாகவுஞ் செய்யும், எ-று.          (115)

 339. விழுந்தெழு நரகத் துய்க்கும் வெருவுறு விலங்கி லாக்கு
     மழிந்ததீக் குலத்தி லுய்க்கு மட்டுணா வகத்து ளாக்கு
     மிழிந்ததம் சுற்றத் தார்க்கும் பிச்சையு மிடாமற் காக்கும்
     கழிந்தநோ யுடம்பை யாக்குந் தாயருங் கடியப் பண்ணும்.

     (இ-ள்.)  விழுந்தெழு  -  தலைகீழாக வீழ்ந்து வீழ்ந்தெழுகின்ற,
நரகத்துய்க்கும்  -  நரகத்தில்  அவர்களைச்  செலுத்தும், வெருவுறு -
ஸ்வபாவத்தில்    பயத்தையேயடையக்   கூடிய,   விலங்கிலாக்கும் -
திரியக்கதியில்      அடையும்படி        செய்விக்கும்,     அழிந்த
தீக்குலத்திலுய்க்கும்  -  கெட்ட பொல்லாங்கான தொழில்களையுடைய
சண்டாளாதி  குலத்தில்  செலுத்தி  மனுஷ்யராகப்பண்ணும், அட்டுணா
அகத்துளாக்கும்  -  சமையல் செய்து சாப்பிடவகையில்லாத தரித்திரர்
வீடுகளிற்   பிறக்கும்படி   செய்யும்,  இழிந்த   -   குறைந்த,   தம்
சுற்றத்தார்க்கும்  -  தம்முடைய  பந்துக்களுக்கும், பிச்சையும் இடாமல்
- ஒருவரையும்   பிச்சை  கூடக்  கொடுக்கவொட்டாமல்,  காக்கும் -
காவல்  செய்யும்,  கழிந்த - அதிகமாகிய, நோய் - வியாதியையுடைய,
உடம்பை  ஆக்கும் - சரீரத்தை  அவர்களுக்குண்டுபண்ணும், தாயரும்
- பெற்ற  தாயும்,  கடியப்  பண்ணும்  -  (அவர்களை) வெறுக்கும்படி
செய்விக்கும், எ-று.                                      (116)

 340. ஆதலாற் களவ தாகா விருமைக்கு மொருமை யொக்கத்
     தீதெலா மாக்கு மென்று தேறுநல் லறத்தைச் செப்பும்
     பூதிதா னாதி யாய களவினைப் பொருந்திப் பொல்லா
     நீதியா லமைச்சு நீங்கா செல்வமுங் கிளையு நீத்தான்.