(இ-ள்.)
ஆதலால் - ஆகையினாலே, களவது - திருடானது,
ஆகாயாவர்களாலும் செய்யவும் விரும்பவும் தகாதது, இருமைக்கும் -
இம்மைமறுமை இரண்டிலும், தீதெலாம் - பொல்லாங்குகளை எல்லாம்,
ஒருமை யொக்க - ஒன்றாகப்பொருந்த, ஆக்குமென்று - ஆக்களவு
செய்விக்குமென்று, தேறும், தெளியும் படியான, நல் - நன்மையாகிய,
அறத்தை - தருமத்தை, செப்பும் சொல்கின்ற, பூதிதான்
- ஸ்ரீ
பூதிமந்திரியானவன், ஆதியாய - இருவகைகளில் முதலாவதாகிய,
களவினை - காரியக்களவை, பொருந்தி - சேர்ந்து,
பொல்லா -
பொல்லாங்காகிய, நீதியால் - தனது நீதியினால், அமைச்சு - மந்திரித்
தனத்தையும், நீங்கா - நீங்கி, செல்வமும்
- ஐஸ்வரியத்தையும்,
கிளையும் - பந்துக்களையும், நீத்தான் - இழந்தான், எ-று. (117)
341. மந்தரி வடிவை யெல்லாம் மன்னவன் மனத்திவ் வாறு
சிந்தியா வியந்து நோக்கா தேறுவ தாரை யென்னா
அந்தணன் றமிலன் றன்னை யவன்பதத் தமைச்ச னாக்கி
மந்திரம் போல நின்று மண்ணினைத் தாங்கு மன்னோ.
(இ-ள்.) (அதன்மேல்) மந்திரி
- மந்திரியினது, வடிவை எல்லாம்
- கபட ஸ்வரூபத்தை எல்லாம், மன்னவன் - அரசன்,
மனத்து -
மனதில், இவ்வாறு - இந்தப் பிரகாரம், சிந்தியா - சிந்தித்து, வியந்து -
ஆச்சரியமடைந்து, யாரை - இனி எவர்களை, தேறுவது - மந்திரியாகத்
தேர்ந்தெடுப்பது, என்னா - என்று, நோக்கா - ஆராய்ந்து பார்த்து,
அந்தணன் - பிராமணனாகிய, தமிலன்றன்னை
- தர்மிலன்
என்பவனை, அவன் பதத்து -
அந்த ஸ்ரீ பூதிபதத்திலே,
அமைச்சனாக்கி - மந்திரியாக ஸ்தாபித்து, மந்தரம்
போல -
மகம்மேரு பர்வதத்தைப் போல, நின்று - நடு நிலையில் சலனமின்றி
நின்று, மண்ணினை - பூமி இராஜ்ஜியத்தை, தாங்கும்
- தரித்து
நடத்துபவனாயினான், எ-று. (118)
342. திரைசெறிந் திலங்கு மாழிப் படிமன்னன் றேவி யோடு
முரைசெறிந் திலங்குங் கீர்த்தி யுவகையி னோடச் செம்பொன்
வரைசெறிந் திலங்குந் திண்டோள் வணிகன்மற் றொருநாள் வாடா
விரைசெறிந் திலங்க திங்க வனஞ்சென்று விரகிற் புக்கான்.
(இ-ள்.) (இவ்வாறு)
திரை - அலைகள், செறிந்து - சேர்ந்து,
இலங்கும் - விளங்கும், ஆழி - சமுத்திரஞ்
சூழ்ந்த, படி -
பூமியையாளும் படியான, மன்னன் . அரசன், தேவியோடும் - தனது
தேவியுடன், உரை செறிந்து - உலகத்தார் வசனங்களிற் சேர்ந்து,
இலங்கும் - விளங்குகின்ற, கீர்த்தி - புகழோடும், உவகையின்
-
சந்தோஷத்தோடும், ஓட - நீதி மார்க்கத்தில் செல்லுகின்ற காலத்தில்,
செம்பொன்வரை - மகம்மேரு பர்வதம்போல், செறிந்து - சேர்ந்து,
இலங்கும் - விளங்குகின்ற, திண்டோள் - வலியதோளையுடைய,
வணிகன் - பத்திரமித்திர ஸ்ரீஷ்டியானவன், ஒருநாள் - ஒருதினம்,
வாடா - குறையாத, விரை - வாசனை, செறிந்து |