பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 161


 

 350. புலைசுண்பா னுண்ட வுண்டி வலியினா லுயிரைப் போற்றின்
     மலையினும் பெரிய வுண்டி வலியினா லுயிரைச் சால
     நலியுமேல் நரகத் தாழ்த்து நடலைகள் படுமென் றாலிப்
     புலைசுண்பார்க் குண்டி யீத னன்றுமா மன்று மாமே.

     (இ-ள்.) புலைசுண்பான் - மாம்ஸம் தின்பவன், உண்ட - புசித்த,
உண்டி  வலியினால்  -  ஆகாரத்தினுடைய  சத்தியினால்,  உயிரை -
ஜீவன்களை, போற்றின் - தயவுவந்து ரக்ஷிப்பானேயாமாகில், (அதனால்
வரும் புண்ணியம்),  மலையினும்  பெரிய - தாதாவுக்குப் பர்வதத்தைப்
பார்க்கிலும்,  பெரியதாகும்,  உண்டி - ஆகாரம் புசித்த, வலியினால் -
சக்தியினால்,  உயிரை  -  ஜீவன்களை, சால - மிகவும், நலியுமேல் -
வருத்துவானேயாமாகில்,      நரகத்    தாழ்த்தும்    -   நரகத்தில்
ஆழ்த்தும்படியான,  நடலைகள்  -  பாபங்கள், படும் - தாதாவுக்கும்
உண்டாகும்,  (என்று   சாஸ்திரம்  கூறுகின்றது)  என்றால்  -  அது
இவ்வாறென்று  சொல்லுமிடத்தில்,   இப்புலைசுண்பார்க்கு   -  இந்த
மாம்ஸம்  தின்பவர்களுக்கு, உண்டி - ஆஹாரத்தை,  ஈதல் - தானஞ்
செய்வது,    நன்றுமாம்   -   நல்ல   தாகவுமாகும்,   அன்றுமாம் -
பொல்லாததாகவுமாகும், எ-று.

 351. அகதிக ளறத்தி னின்றா ரரும்பிணி யாளர் மூத்தார்
     குகதிகள் குருடர் மூகர் கொலைத்தொழில் மனத்து மில்லார்
     அகல்கையி னேந்தி னோருக் கருளினா லீந்த வுண்டி
     மகரிகை மலிந்த பூணோய் மத்திம தான மாமே.

     (இ-ள்.) அகதிகள் - வறுமையுற்றவர்களும், அறத்தினின்றோர் -
விரதத்தோடு   கூடப்பட்ட  தர்மஸ்தர்களும்,  அரும்  -  அரிதாகிய,
பிணியாள், வியாதியஸ்தர்களும், மூத்தார் - விருத்தர்களும், குகதிகள் -
நடக்கவியலாத   முடவர்களும்,   குருடர்  - அந்தகர்களும்,  மூகர் -
ஊமைகளும்,  கொலைத்தொழில்  -  ஜீவவதை  செய்யும்  தொழிலை,
மனத்துமில்லார்       -       மனத்தினாலும்         நினைக்காத
அஹிம்ஸாவிரதத்தையுடையவர்களும், அகல்  - பிக்ஷைப்பாத்திரத்தை,
கையில்  ஏந்தினோருக்கு   -   கையில்   தரித்தவர்களும்   ஆகிய
இவர்களுக்கு,  அருளினால்  -  தயவினால், ஈந்த - கொடுக்கப்பட்ட,
உண்டி  -  ஆஹாரமானது,  மலிந்த  -  நிறைந்த,  மகரிகை - மகர
கண்டிகையென்னும்,  பூணோய்  -  ஆபரணத்தை  யணிந்திரா நின்ற
பத்திரமித்திரனே!,   மத்திம   தானமாம்  -  மத்தியம   தானமாகும்,
எ-று.                                                 (128)

 352. உறவியைப் பெரிது மோம்பி யொழுக்கத்தை நிறுத்தி யுள்ளம்
     பொறிவழி படர்ச்சி நீக்கிப் பிறர்க்குநன் றாற்றிப் பொய்தீர்
     நெறியினைத் தாங்கி நீங்கா வீட்டின்பம் விழைதல் செய்யு
     முறுதவர்க் கீந்த வெல்லா முத்தம தான மாமே.