பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 167


Meru Mandirapuranam
 

   பூங்குழலி யோங்கிய வதிங்கவனம் புக்கு
   வேங்கைமக வாய்மகன்கண் வேரத்தொடும் பிறந்தாள்.

   (இ-ள்.)   ஆங்கவன் -   அங்கே   அந்தப்   பத்திரமித்திரன்,
தன்சொல் - தனது வசனத்தை, மறுத்த - தடைசெய்த, அழற்சியினும் -
கோபத்தினாலும்,பொருள் - திரவியங்கள், நீங்க - நீங்குதலாலே, எழு
-  உண்டாகிய,  ஆர்த்தத்தினும்  - ஆர்த்ததத்தியானத்தாலும், பூம் -
பொலிவுபெற்ற,குழலி -அளகத்தையுடையதாயாகிய சுமித்திரையானவள்,
அவ்வுடம்பு - அச்சரீரத்தை, நீத்து - விட்டு, ஓங்கிய - உன்னதமாகிய,
அதிங்கவனம் -அதிங்கவனத்தில், புக்கு - அடைந்து,வேங்கைமகவாய்
- புலிக்குட்டியாகி,  மகன்கண் - புத்திரன் பேரில்,  வேரத்தொடும் -
வைரபாவத்தோடு, பிறந்தாள் - உற்பவித்தாள், எ - று.

                          வேறு
  362. அருளினா லுயிர்கட் கீந்த வப்பெரு ணிமித்த மாக
      வெருவினான் மயங்கி வாழும் விலங்கிலிவ் வேழைத் தோற்ற
      மிருளிலாத் தேவர் கோயிற் கிட்டதோர் விளக்கின் மேலே
      மருளினால் விட்டிற் பாய்ந்து மரித்ததே போல்வ தொன்றே.

    (இ-ள்.)  அருளினால் -  சீவதயவினால், உயிர்கட்கு - அன்னிய
ஜீவர்களுக்கு,  ஈந்த  -  கொடுக்கப்பட்ட,  அப்பொருள்  -  அந்தத்
திரவியமே,  நிமித்தமாக  -  காரணமாக, வெருவினால் - பயத்தோடு,
மயங்கி  -  பிரமித்து,  வாழும்  - வாழுகின்ற, விலங்கில் - விலங்கு
கதியில்,   (தோன்றிய)   இவ்வேழை   -   இந்த  அஞ்ஞானியாகிய
சுமித்திரையின்,   தோற்றம்  -   இந்தத்தோற்றமானது,  இருளிலா -
அந்தகாரமில்லாத,  தேவர் கோயிற்கு - ஸ்வாமி கோயிலுக்கு, இட்டது
- இடப்பட்டதாகிய,  ஓர் -  ஒரு, விளக்கின்மேல் -  தீபத்தின்பேரில்,
மருளினால்  -  மயக்கத்தினால்,  விட்டில் - விட்டில்   பூச்சியானது,
பாய்ந்து - விழுந்து,மரித்தது - இறந்ததை,போல்வது - ஒப்பானதாகிய,
ஒன்று - ஒரு காரியமாம், எ - று. (6)

 363. அப்பச்சக் காண மாய கோபலோ பத்தி னாலே
     செப்பட்ட பிறவி யாளவ் வனத்திடைத் திரியு நாளுட்
     கைப்பட்ட பொருளை யெல்லாங் கருணையா லீவு மந்த
     மெய்ப்பட்ட புகழி னானவ் வனத்திடை விரகிற் புக்கான்.

   (இ-ள்.) அப்பச்சக் காணமாய - அப்பிரத்தியாக்கியான மென்னும்,
கோபலோபத்தினாலே - குரோதமான மாயாலோபத்தினாலே, செப்பு -
முன் சொல்லப்பட்ட, அட்ட - கொடுமையான, பிறவியாள் - பிறப்பை
யுடையயவளாகிய சுமித்திரை, (அவ்வாறு புலியாய்), அவ்வனத்திடை -
அந்தக்காட்டில், திரியுநாளுள் -