172மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)   (அவ்வாறு) சில - சிலவாகிய, மயில் - மயில்கள்,  சூழ
-  சூழும்படி,  செல்லும்  - செல்லுகின்ற, சிங்கபோதகத்தைப்போல -
ஒரு  ஆண்  சிம்மக்குட்டியைப்போல, கலைபயில்  - மேகலாபரணம்
தங்கியிருக்கின்ற,  அல்குலாரும் - அல்குலையுடைய ஸ்திரீமார்களும்,
குமரனும்  -  அரசகுமாரனாகிய சிம்மச்சந்திரனும்,   கழுமுநாளுள் -
பொருந்தியிருக்கின்ற காலத்தில், கொலைபயில் - கொலைத்தொழிலிற்
பழகியிருக்கின்ற,   களி   -   கர்வம்  பொருந்திய,   நல்யானை  -
அழகியயானைகளையுடைய,      கொற்றவன்     -     சிம்மஸேன
மகாராஜனுடைய,      தேவிதன்பால்      -        மனைவியாகிய
இராமதத்தையினிடத்தே,மலைமிசை மதியம்போல - பர்வதத்தின் மேல்
உதித்த   சந்திரனைப்போல,  மைந்தன் மற்றொருவன்  -  மற்றொரு
புத்திரன், வந்தான் - வந்து தோன்றினான், எ-று. (16)

 373. இரவல ரென்று முன்னீ ரிடர்கெட வெழுந்த வந்தப்
     புரவல குமர னாமம் பூரசந் திரனென் றார்கள்
     கரைபொரு கடலந் தானைக் காவல குமரர் வானத்
     திரவியு மதியும் போல விருநிலத் தியலு நாளால்.

    (இ-ள்.)   (அங்ஙனம்)   இரவலரென்னும்   -     யாசகரென்று
சொல்லப்பட்ட,    முன்னீர்   -    சமுத்திரத்தினுடைய,   இடர்  -
அலையென்னும்  ஓயாதவறுமையானது, கெட - நீங்கும்படி, எழுந்த -
உண்டாகிய,அந்தப்புரவலகுமரன் - அந்த இராஜகுமாரனுடைய, நாமம்
- பெயரை,   பூரசந்திரன்  என்றார்கள்  -  பூரண  சந்திரன்  என்று
(தாய்தந்தையர்) இட்டார்கள், கரை - கரையில், பொரு - மோதுகின்ற,
கடல் -  சமுத்திரம்போல்  பெரிதாகிய, அம் -  அழகிய,  தானை -
சேனையையுடைய,  காவலகுமரர்  - அந்த அரச குமாரர்களிருவரும்,
வானத்து - ஆகாயத்தில் செல்கின்ற, இரவியும் - சூரியனும், மதியும் -
சந்திரனும், போல - நிகர்ப்ப, இரு நிலத்து - பெரிதாகிய விப்பூமியில்,
இயலுநாள் - (வளர்ச்சியுற்றுச்) செல்கின்ற காலத்தில், எ-று.

                          ஆல் - அசை. (17)

                           வேறு.
  374. வாரி சூழ்வல யந்துய ரெய்திடிற்
       றாரி யானது தானுட னெய்திடும்
       ஏர ணிந்துல கின்புறி னின்புறும்
       மாரி போற்கொடை வண்கையம் மன்னனே.

   (இ-ள்.)  வாரிசூழ் -  சமுத்திரஞ்சூழ்ந்த,  வலயம் - வட்டமாகிய
பூமியானது, துயரெய்திடில் - துக்கமடைந்தால், தாரியான் - மாலையை
யணிந்தவ