பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 173


Meru Mandirapuranam
 

னாகிய,   மாரிபோல்  -  மழையைப்போல,   கொடை  -  தியாகஞ்
செய்யும்படியான,   வண்   -   வளப்பம்   பொருந்திய,   கை   -
கையையுடைய, அம்மன்னன் - அந்த சிம்மஸேன மகாராஜன், அது -
அவ்வுலகமடைந்த  அத்துக்கத்தை,  தான் -  தானும்,  உடன் - ஒரு
தன்மையாக,  எய்திடும்  -  அடைவான்,  ஏர்  அணிந்து  - நன்மை
நிறைந்து,  உலகு  -   இவ்வுலகத்தார், இன்புறின்  -  இன்பமுற்றால்,
இன்புறும் - தானும் சந்தோஷமடைவான், எ-று.

              `தாரி? என்பதில், இ - சாரியை. (18)

 375. பொன்னு நன்மணி யும்புனை பூண்களும்
     மன்னும் பொன்னறை மற்றொரு நாள்புக
     பன்ன கம்முன்ன மாயவன் பார்த்திடா
     மின்னின் வேரத்தின் வீழ்ந்தெயி றூன்றினான்.

   (இ-ள்.)   பொன்னும்  -  ஸ்வர்ணமும்,  நல்  -  நன்மையாகிய,
மணியும்   -   அரதனங்களும்,   புனை   - அலங்கிருதமாயணிந்து
கொள்ளும்படியான,  பூண்களும்  -  ஆபரணங்களும்,  மன்னும்   -
சேர்ந்திராநின்ற, பொன்னறை  - பாண்டாகாரத்தில், மற்று - பின்னை,
ஒரு நாள் - ஒரு தினம், புக -(மேற்கூறிய அரசன்) அடைய, முன்னம்
-  முன்னே,   பன்னகம்   ஆயவன்   -  சர்ப்பமாகப்  பிறந்திருந்த
ஸ்ரீபூதியானவன்,  பார்த்திடா  -  (அரசனைக்)  கண்டு, வேரத்தின் -
வைரபாவத்தினால், மின்னின் - மின்னல் சடுதியில் தோன்றுவதுபோல,
வீழ்ந்து  -   மேல்  விழுந்து,  எயிறூன்றினான்  - பல்லைப்பதித்துக்
கடித்தான், எ-று. (19)

 376. பைய ரவின் விடத்தொடு பார்மிசை
     மைய லுற்று விழுந்தனன் மன்னவன்
     வெய்ய வ்னர வத்தொடு மேதினி
     வைய நைய விழுந்தது போலவே.

     (இ-ள்.)   (அவ்வாறு   அந்நாகம்   கடித்த    மாத்திரத்தில்)
வெய்யவன் - சூரியனானவன்,  அரவத்தொடு - (தன்னைத் தீண்டிய)
இராகுவாகிய  சர்ப்பத்தோடு,  மேதினி  - இந்தப்பூமியில், வையம் -
இவ்வுலகத்தார், நைய - (இருளினால்) வருந்தும்படி,  விழுந்ததுபோல
-  வீழ்ந்ததை  நிகர்க்க,  பை -  பணாமுடியையுடைய,  அரவின்  -
சர்ப்பத்தினுடைய,   விடத்தொடு  -   விஷத்துடனே,   பார்மிசை  -
இப்பூமியின்  மேல்,   மன்னவன்  -   அரசனானவன்,   மையலுற்று
மயக்கத்தைப் பொருந்தி, விழுந்தனன் - விழுந்தான், எ-று. (20)

 377. கல்லென் னோசை கடலுடைந் திட்டென
     வெல்லை யின்றி யெழுந்த தியாவருஞ்