உயிர் - உயிரானது, ஏகியது - சரீரத்தைவிட்டு நிங்கிற்று, ஏகலும் -  அவ்வாறு நீங்கிவிடவும் (பின்னை என்ன நடந்ததெனில்), எ-று.				(23) 
 380.	மைய லுற்றவன் மந்திர மொன்றினால் 
       நெய்யொ ழுக்கி நெருப்பை யெரித்திடாப் 
       பையெ னப்பண நாகமெ லாமழைத் 
       துய்ய வுநுமக் கொன்றுரை செய்கின்றேன். 
       (இ-ள்.)   அவன் -  அம்மந்திரவாதியானவன்,    மையலுற்று - 
      மயக்கத்தையடைந்து,       மந்திரமொன்றினால்      -   மற்றொரு 
      மந்திரத்தினால்,   நெய்யொழுக்கி  - நெய்யை வார்த்து, நெருப்பை - 
      அக்கினியை, எரித்திடா - எரித்து, (அதாவது : ஒளபாஸனம் அல்லது 
      ஓமம் பண்ணி),   பையென  -  மெதுவாக,   பணம்  -      பணா 
      முடியையுடைய,
      நாகமெலாம் - ஸ்ர்ப்பங்களை யெல்லாம்,  அழைத்து 
      -      அம்மந்திரபலத்தால்   அழைப்பித்து,    (அவைகளைப்   பார்த்து 
      ஸர்ப்பங்காள்!)  நுமக்கு   - உங்களுக்கு, உய்ய - பிழைக்கும்படியாக, 
      ஒன்று  -  ஒருகாரியம்,  உரை  செய்கின்றேன்  -  சொல்கின்றேன், 
      (அதாவது), எ-று. 
       
                           உம் - அசை.								(24) 
   
    					 381.	குற்ற மில்லவர் மற்றிந் நெருப்பினை 
           யுற்ற போழ்திது நீரினை யொத்திடும் 
           குற்ற மில்லவர் போநடு வன்றெனி 
           லிற்ற தும்முயி ரென்கையி லென்றனன். 
    
   	    (இ-ள்.)குற்றமில்லவர் - (அரசனைக்கடித்த) குற்றமில்லாதவர்கள், 
   	இந்நெருப்பினை   -   இந்த   ஓமர்க்கினியை,   உற்றபோழ்து   - 
   	பொருந்தினபோது,      இது      -      இவ்வோமாக்கினியானது, 
   	நீரினையொத்திடும்
   	- (அவர்க்கு) ஜலத்தை நிகர்க்கும், குற்றமில்லவர்- 
   	குற்றமில்லாதவர்கள்,  நடு  -  இவ்வக்கினியின்  மத்தியில்,  போம் - 
   	போவீராக,  அன்றெனில்  -  அப்படியில்லாவிட்டால்,  உம்முயிர்  - 
   	உங்கள்  உயிரானது,  என்  கையில்  -  எனது  கரத்தில், இற்றது - 
   	அகப்பட்டு   இறந்து படுவதாகும்,  என்றனன் -  என்று சொன்னான், 
   	எ-று. 
   	 
                     	மற்று - அசை.								(25) 
 382.	அஞ்சி மற்றவ னாணை யிறந்திடா 
        நஞ்சு தாரிக ணண்ணின தீயினைப் 
        புஞ்சு பூம்பொய்கை புக்கன போலவே 
        யுஞ்சு போயின வொன்றொழி யாமையே. 
 |