(இ-ள்.) மற்று - பின்பு,அவன் - அம்மாந்திரீகனுடைய, ஆணை -
ஆக்கினைக்கு, அஞ்சி - பயந்து, இறந்திடா - அதனைக்
கடவாதனவாகிய, நஞ்சுதாரிகள் - ஸர்ப்பங்களெல்லாம், தீயினை -
ஹோமாக்கினியை, நண்ணின - அடைந்தவைகளாகி; புஞ்சு -
நீர்சேர்ந்திராநின்ற, பூம் - அழகிய புஷ்பங்களையுடைய, பொய்கை -
தடாகத்தில், புக்கனபோல - புகுந்து வெளியேறியவைபோல,
ஒன்றொழியாமை - ஒன்றும் கெடுதியடையாமல், உஞ்சுபோயின -
உயிர்பிழைத்துப் போயின, எ-று. (26)
383. வந்த கந்தனன் மற்றந் நெருப்பினை
நின்று புக்கிட நீறது வாயது
சென்று காள வனத்திலத் தீமையா
லன்று லோபச் சமரம தாயினான்.
(இ-ள்.) 1அகந்தனன்
- அகந்தன ஸர்ப்பமானது, வந்து -
சமீபத்தில் வந்து, அந்நெருப்பினை - அவ்வக்கினியில், புக்கிட -
புகுந்த மாத்திரத்தில், நின்று -அந்நெருப்பிலேயே நின்று, நீறதுவாயது
- பஸ்மமாகியது, (அவ்வாறாயபின் அவ்வகந்தனனாயிருந்த ஸ்ரீபூதி
யென்னும் மந்திரி), சென்று - போய், அத்தீமையால் - அந்த பாப
கர்மத்தினாலே, காளவனத்தில் - காளமென்னும் வனத்திலே,அன்று -
அக்காலத்தில், லோபம் - லோபகுணத்தை மிகுதியாகவுடைய,
சமரமதாயினான் - சமரீ மிருகமாய்ப் பிறந்தான், எ-று.
மற்று - அசை. (27)
384. ஆயு வுங்கிளை யும்மர சும்மெலாம்
மாய மென்பவன் போல மரித்திடாச்
சீய சேனனுந் தீவினை வன்மையா
லாயி னன்சல்ல கீவனத் தானையே.
(இ-ள்.) (இ-ள்.) சீயசேனன் - சிம்மசேன மஹாராஜனானவன்,
ஆயுவும் - ஆயுஷ்யமும், கிளையும் - பந்துத்துவமும், அரசும் -
இராஜ்யமும், (ஆகிய) எலாம் - இவைகளெல்லாம்,
மாயமென்பவன்போல - மாயமாக நீங்கப்பட்டவை யென்று
யாவர்களுக்கும் தெரிவிப்பவன் போல, மரித்திடா - (மேற்கூறியபடி)
இறந்து, தீவினை - பாப வினையினது, வன்மையால் -
வலிமையினாலே, சல்லகீவனத்து - சல்லகீ என்கிற வனத்திலே,
ஆனையாயினன் - யானையாகப் பிறந்தான், எ-று. (28)
385. அசனி கோட மெனும்பெய ராயவன்
கசனி செய்து கடாத்தயல் யானையை
_______________________________________________
1அகந்தனன் - அகந்தனன் என்னும் பாம்பாகிய ஸ்ரீபூதி
யென்னும்
மந்திரி.
|