விசனி யாப்பிடி சூழ விலங்கன்மே
லசன மிங்குவ தாக லமர்ந்தனன்.
(இ-ள்.) அவன் - அவ்வாறு யானையாகப் பிறந்த மன்னன்,
அசனி கோடமெனும் - அசனி கோஷமென்கிற, பெயராய் - பெயரை
யடைந்து, கடாத்து - தன்மத பலத்தினால், அயல் யானையை -
பக்கத்தில் சஞ்சரித்த மற்ற ஆண் யானைகளை, கசனி செய்து -
வருத்தஞ் செய்து, விசனியா - வருத்தமடையாத, பிடி - பெட்டை
யானைகள், சூழ - தன்னைச் சூழ, விலங்கன்மேல் - அக்காட்டிலுள்ள
பர்வதத்தின் மேல், அசனம் - தனக்கு இரையானது, இங்குவதாக -
பெருங்காயத் தழையாக, அமர்ந்தனன் - பொருந்தினான், எ-று. (29)
386. நாவி நாறுங் குழல்கள் விரித்திடா
ஆவி போன கலாவி கிடந்தெனத்
தேவி யைத்தெருண் டாரெடுத் துத்துய
ரோவும் வண்ண முரைத்துட னோம்பினார்.
(இ-ள்.)(இஃதிப்படியிருக்க,முன்னுரைத்தபடி மன்னன் இறந்ததற்கு)
நாவி - கஸ்தூரி வாசனையானது, நாறும் - வீசுகின்ற, குழலிள் -
அளகங்களை, விரித்திடா - விரித்துக்கொண்டு, ஆவி போன -
உயிர்நீங்கின, கலாவி - ஆண் மயிலானது, கிடந்தென -
கிடந்ததுபோல, (பிரக்ஞையற்றுக் கிடந்த) தேவியை - இராமதத்தா
தேவியை, எடுத்து - தூக்கி, தெருண்டார் - ஞானத்தெளிவுள்ள சிலர்,
துயர் - அரசனிறந்ததனா லுண்டாகிய துக்கம், ஓவும் வண்ணம் -
அவளை விட்டு நீங்கும்படியான விதங்களை, உரைத்து - சொல்லி,
உடன் - உடனே, ஓம்பினார் - (அவளை) உபசரித்தார்கள், எ-று. (30)
387. தோன்றி னந்நிலை யாதுட னேகெட
லீன்ற தாயரு மீட்டுவைத் தேகலு
மான்ற வரழி வெய்தலும் வையகந்
தோன்றி னன்று தொடங்கின வல்லவோ.
(இ-ள்.) (அவ்வாறு உபசரித்து) தோன்றின - (இவ்வுலகத்தில்)
பிறந்த பரியாயங்களெல்லாம், நிலையாது - நிலையில்லாமல், உடனே
- அவ்வாறு தோன்றுதலோடு கூடவே, கெடல் - கெடுதலும், ஈன்ற -
நம்மைப்பெற்ற, தாயரும் - தாய்மார்களும், ஈட்டு வைத்து - பெற்று
வைத்துவிட்டு, ஏகலும் - அழிவெய்திச் செல்லுதலும், ஆன்றவர் - பெரியோர்களாயினாரும், அழிவெய்தலும் - நாசத்தை அடைதலும்,
வையகம் - இந்த வுலகமானது, தோன்றினன்று - தோன்றின அன்று
முதல், (அதாவது : அநாதியாகவே) தொடங்கினவல்லவோ - சேர்ந்து
வரப்பட்டவைகளல்லவோ", எ-று.
|