178மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   இவ்வாறு கூறியதனால், சகல பொருள்களும், உத்பாத, விய, த்ருவ,
யுக்தமாயன  என்பது, திரவியார்த்திக,  பரியாயார்த்திகமாகிய இருவித
நயங்களாலும் ஆகமப் பிரமாணமாகக் கொள்ளப்படும். தோன்றினன்று
என்பதில் அகரந் தொக்கது. (31)

 388. செல்வ முஞ்சில நாளிடை யேகெடு
     மல்ல லென்று முறாதவ ரும்மிலை
     மல்லை வென்ற புயத்தெழின் மன்னவ
     ரெல்லை யில்லையிம் மண்ணி லிறந்தவர்.

   (இ-ள்.)   செல்வமும்  -  ஐஸ்வரியமும்,  சில  நாளிடை  - சில
தினங்களுக்குள்,கெடும் - நீங்கிவிடும், அல்லல் - துன்பத்தை, என்றும்
- எப்பொழுதும்,உறாதவரும் - அடையாதவர்களும், இலை - இல்லை,
மல்லை  -    மல் யுத்தத்தை,   வென்ற  -  ஜெயித்த,  புயத்து  -
புஜங்களையுடைய,எழில் - அழகு பெற்ற, மன்னவர் - இராஜாக்களில்,
இம்மண்ணில்  -   இப்பூமியில்,  இறந்தவர்  -  இறந்துபோனவர்கள்,
எல்லையில்லை - கணக்கில்லை, எ-று. (32)

                            வேறு.
  389. இறந்தவர்க் கிரங்கி நாமு மழுதுமே லின்று காறும்
      பிறந்தநம் பிறவி தோறும் பெற்றசுற் றத்தை யெண்ணி
      லிறந்தநா ளலகை யாற்றா தெவருக்கென்றழுது மென்னத்
      திறந்தெரிந் துணர்ந்து தேவி சிறிதுபோய்த் தேறினாளே.

    (இ-ள்.)  இறந்தவர்க்கு  -  இறந்து போனவர்களுக்கு, இரங்கி -
மனங்கரைந்து,  நாமும்   -  (இப்போது  உயிருடனிருக்கிற)  நாமும்,
அழுது   மேல்   -  அழுவோமானால்,  இன்றுகாறும்  -  இன்றைய
வரையில்,  பிறந்த  - தோன்றிய, நம் - நம்முடைய, பிறவி தோறும் -
சரீரப்  பிறப்புக்களிலெல்லாம்,  பெற்ற  -  அடைந்த,   சுற்றத்தை -
பந்துக்களை, எண்ணில் - கணக்கிடுமிடத்தில், இறந்த நாள் - இதற்கு
முன்  சென்ற  நாள்களில்,  அலகை  யாற்றாது -  இவ்வளவென்கிற
கணக்குச்  சொல்லுதலில்  முடியாது,  (ஆகையால்), எவருக்கென்று -
(அந்த     அனந்தம்     பிறப்புக்களிலெல்லாம்    இறந்தவர்களில்)
யாருக்கென்று,   அழுதும்   -   அழுவோம்,    என்ன  -  என்று
அறிவுள்ளவர்  சொல்லவும்,  தேவி   -   இராமதத்தா  தேவி, சிறிது
போய்  -  கொஞ்சக்காலம்  சென்று, திறம்  -  அவர்கள்  சொன்ன
உறுதிமொழிகளை,   தெரிந்துணர்ந்து - ஆராய்ந்தறிந்து, தேறினாள் -
தெளிந்தாள், எ-று. (33)

 390. தேறினாள் மைந்தர் தம்மைத் தருகெனச் செப்ப நொந்த
     வேறுபோ னடந்து வந்தாங் கிறைஞ்சிநின்றவரை நோக்கிப்