பேறிலே லும்மைச் சூட்டி யரசனைப் பிரிந்தேனென்ன
வாறிழி வரையைப் போல வழுதடி தொழுது வீழ்ந்தார்.
(இ-ள்.) தேறினாள் - (அவ்வாறு) தெளிவடைந்தவளாகிய
இராமதத்தை, (அதன்மேல்) மைந்தர் தம்மை -தன் குமாரரிருவரையும்,
தருகென - அழைத்து வருக என்று, செப்ப - (அருகில் நின்றவரை
நோக்கிச்) சொல்ல, (அவர்கள் போய்ச் சொன்ன மாத்திரத்தில்
பிள்ளைகளும் வந்தார்கள்) நொந்த - வருத்தமுற்ற, ஏறுபோல் -
விருஷபத்தைப்போல, நடந்து வந்து - மேற்கூறியபடி நடையாக வந்து,
ஆங்கு - தாய் இருந்த அவ்விடத்தில், இறைஞ்சி நின்றவரை -
வணங்கி நின்ற அந்தக் குமாரர்களை, நோக்கி - (இராமதத்தை)
பார்த்து, பேறிலேன் - தவபாக்கியமில்லாத யான், உம்மைச் சூட்டி -
உங்களை ஈன்று பூமிக்கு அணியாகச் சேர்த்து (இராஜ்ய
பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்னே), அரசனை - இராஜாவை,
பிரிந்தேன் என்ன - விட்டு நீங்கினேன் என்று சொல்லி வருந்த,
(அவர்களும் வருத்தமுற்று) ஆறிழி - அருவி பாயா நின்ற,
வரையைப்போல - பர்வதத்தைப்போல, அழுது - மார்பின்மீது
கண்ணீரை வடித்து, அடி தொழுது - தாயின் பாதத்தை வணங்கி,
வீழ்ந்தார் - பூமியில் விழுந்தார்கள், எ-று. (34)
391. திருவனா ளவரைத் தேற்றிச் சீயசந் திரனை நோக்கி
முருகுலா மகுடஞ் சூட்டி மண்முழு தாள்க வென்று
பொருவிலா ளதனிற் பின்னைப் பூரசந் திரனை நோக்கி
யரசிளங் குமர னாய்நீ யமர்ந்தினி திருக்க வென்றாள்.
(இ-ள்.) ( அப்படி வணங்கியபின்பு ) பொருவிலாள் -
ஒப்பில்லாதவளாகிய, திருவனாள் - இலக்குமிபோன்ற இராமதத்தை,
அவரை - அந்தக் குமாரர்களை, தேற்றி - தெளியச் செய்து,
(அவர்களுள்) சீயசந்திரனை - சிம்மச்சந்திர குமாரனை, நோக்கி -
பார்த்து, முருகுலாம் - வாசனை வீசுகின்ற, (புஷ்பமாலைகளோடு
கூடிய) மகுடஞ் சூட்டி - கிரீடத்தையணிந்து,மண்முழுது - இந்தப்பூமி
இராஜ்யம் முழுவதையும், ஆள்க வென்று - நீ அரசாளக்கடவாய்
என்று சொல்லி, அதனிற்பின்னை - அதன்பிறகு,பூரசந்திரனை நோக்கி
- பூரணச்சந்திர குமாரனைப் பார்த்து, நீ - நீ, அரசிளங் குமரனாய் -
யௌராஜ்யத்தையுடைய இளவரசனாக, அமர்ந்து - பொருந்தி, இனிது
- சந்தோஷமாக, இருக்க என்றாள் - இருக்கக்கடவாயென்று
கூறினாள், எ-று. (35) 392. இந்திர விபவந் தன்னை யிருவகிர் செய்து மைந்த
ரந்தரம் பிறிதொன் றின்றி யின்பத்து ளழுந்து நாளுட்
சிந்துரக் களிற்றுச் சீய சேனன்றன் வார்த்தை கேட்டு
வந்தனர் சாந்தி ரண்ணிய மதியென்பார் துறந்த மாதர்.
|