180மேருமந்தர புராணம்  


 

   (இ-ள்.)   (அவ்வாறே  அமைந்து)  இந்திர   விபவந்தன்னை  -
தேவேந்திர  விபவத்தை,  இருவகிர்  செய்து  - இரண்டு கூறுசெய்து,
மைந்தர்  -  இக்குமாரர்கள்,  அந்தரம் பிறிதொன்றின்றி - வேறொரு
வித்தியாசமுமின்றி, இன்பத்துள் - சௌக்கியத்துள்,அழுந்து நாளுள் -
ஆழ்ந்து    அதனை    அனுபவித்துக்கொண்டிருக்குங்   காலத்தில்,
சிந்துரக்களிறு   -   சிந்துரம்போன்ற  புள்ளிகளையுடைய  மஸ்தகம்
பொருந்திய  பட்டத்து  யானைக்கு  (அதாவது : புகர்முகக்களிறாகிய
யானைக்குத்)   தலைவனாகிய,  சீயசேனன் தன் வார்த்தை கேட்டு -
சிம்மஸேன      மகாராஜனிறந்த      சமாசாரம்       பொருந்திய
வார்த்தைகளைக்கேட்டு,  துறந்த மாதர் - தபத்தைக் கைக்கொண்டிரா
நின்ற ஆரியாங்கனைகளாகிற, சாந்திரணியமதி யென்பார் - சாந்திமதி
இரணியமதி  யென்னும்  இருவரும்,  வந்தனர்  - இராமதத்தையிடம்
வந்தார்கள், எ-று. (36)

 393. அங்கநூல் பயின்று வல்லா ரறவமிர் தளிக்குஞ சொல்லார்
     சிங்கநற் பாய்ச்ச லாதி நோன்பொடு செறிந்து நின்றார்
     தங்கிய கருணை நெஞ்சிற் றரியினா ருயிர்கட் கெல்லாந்
     திங்கள்வெண் குடையி னான்றன் றேவியைக் கண்டு சொன்னார்.

   (இ-ள்.)   (அவ்வாறு வந்து) அங்கநூல் - அங்காகமம் முதலாகிய
சாஸ்திரங்களை,    பயின்று   -   கற்று,   வல்லார்   -  அவற்றில்
வல்லமையுடையவர்களும்,  அறவமிர்து - தர்மாமிருதத்தை, அளிக்கும்
-  கொடுக்கும்  (அதாவது :  உபதேசிக்கும்படியான),  சொல்லார்  -
வசனத்தையுடையவர்களும்,   சிங்கநற்   பாய்ச்சலாதி   -    1ஸிம்ம
நிஷ்கிரீடித முதலாகிய,நோன்பொடு - மஹாநோன்புகளோடு, செறிந்து
-  சேர்ந்து,  நின்றார்  -  நிலைபெற்றவர்களும், உயிர்கட்கெல்லாம் -
ஸ்தாவர   சங்கமாதி   ஸகல   ஜீவன்களின்பேரிலும்,   தங்கிய   -
சேர்ந்திராநின்ற,  கருணை - தயவை, நெஞ்சில் - மனதில், தரியினார்
-  தரித்தவர்களுமாகிய  அவ்விருவரும்,  திங்கள் - சந்திரன்போன்ற,
வெண்குடையினான்தன்  -  வெள்ளைக்குடையையுடைய   அரசனது,
தேவியை   - மனைவியாகிய  இராமதத்தையை,  கண்டு  - பார்த்து,
சொன்னார் - கீழ்வருமாறு சொன்னார்கள், எ-று. (37)

 394. அங்கர வல்கு லாரி வருந்ததி யனைய நங்கை
     மங்கல மிழந்த தெம்ம னோர்கடம் பாவம் வாடிச்
     செங்கய லனைய கண்கள் சிதறநீ யழுத போழ்தும்
     வெங்களி யானை வேந்தன் வெளிப்படா னொழிக வென்றார்.

    (இ-ள்.)   அங்கு    -    அவ்விடத்தில்,     ( மேற்கூறியபடி
சொல்லத்தொடங்கிய அவர்கள்,  இராமதத்தையை நோக்கி), அரவு -
ஸர்ப்பத்தினது படத்தைப்போன்ற,  அல்குலாரில் - அல்குலையுடைய
ஸ்திரீமார்களுக்குள்ளே, அருந்ததி யனைய - அருந்
____________________________________________
1இதன் விவரத்தை நோன்புக் கதையில் பார்த்துக்கொள்க.