பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 181


Meru Mandirapuranam
 

ததிக்குச்  சமானமாகிய,  (கற்பினையுடைய),  நங்கை  -  பெண்ணே!,
மங்கலம்   -   மாங்கல்யத்தை,   இழந்தது   -  நீ  இழந்துவிட்டது,
எம்மனோர்கள் தம் -  எங்களுக்குச் சமானமாகிய மாதர்களது, பாவம்
- பாவமாகும்,  வாடி  -  வாட்டமுற்று, செம் - சிவந்த, கயலனைய -
கெண்டைமீனை  யொத்த,  கண்கள்  -  நேத்திரங்கள், சிதற  - நீர்
சொரியும்படியாக,  நீ அழுதபோழ்தும் - நீ அழுத காலத்தும், வெம் -
வெவ்விதாகிய,  களி  -  கர்வத்தையுடைய, யானை  -  யானைக்குத்
தலைவனாகிய,  வேந்தன்  -  அரசன்,  வெளிப்படான்  -  மீண்டுந்
தோன்றி  வெளிவரமாட்டான், (ஆகையினால்)  ஒழிக  - நீ வருத்தம்
நீங்கக்கடவாய், என்றார் - என்று சொன்னார்கள், எ-று. (38)

 395. ஆர்வத்தி னரற்றிற் சிந்தை யார்த்தமா யதனிற் பின்னை      வேரத்தை யுடைய வாய விலங்கிடைப் பிறந்து தீமைப்
     பாரத்தை யடைந்து சென்று நரகத்திற் பதைப்பர் கண்டாய்
     நேரொத்த மனத்தை யாகி யநித்தமே நினைக்க வென்றார்.

   (இ-ள்.)    ( அவ்வாறு  சொல்லி  மேலும் )    ஆர்வத்தின்  -
ஆசையினால், அரற்றின் - அழுதால், (அப்படி அழுபவர்கள்) சிந்தை
- மனதில்,  ஆர்த்தமாய்  -  ஆர்த்தத்  தியானமாகி,   அதனில்  -
அதனால்,    பின்னை   -   பிற்பாடு,  வேரத்தை  யுடையவாய  -
வைரபாவத்தை  யுடையனவாகிய,   விலங்கிடை   -  விலங்குகளின்
ஜாதியில்,   பிறந்து   -   ஜனித்து,   தீமைப்  பாரத்தையடைந்து  -
பொல்லாங்காகிய  பாபவினைகளின்  சுமையைச் சேர்ந்து,  சென்று -
அப்பிறப்பின்றும்  நீங்கிப்போய்,  நரகத்தில் -  நரகத்திலே  பிறந்து,
பதைப்பர்  -  துக்கமுற்றுத் துடிப்பார்கள், கண்டாய் - நீயும் இதனை
உணர்ந்துள்ளாய்,  (ஆகையினாலே), நேரொத்தமனத்தை  யாகி  - நீ
இன்பதுன்பங்களோடு       கூடிய       சம்ஸாரத்தில்    சமத்துவீ
பாவத்தையுடைய மன ஸுடையவளாகி,   அநித்தமே   -   (சம்ஸார
ஸ்வரூபமானது. அநித்யத்தையே உடையது இதில்      யாதொன்றும்
சாஸ்வதமில்லையென்று) அநித்தியத்தன்மையையே, நினைக்க என்றார்
- நினைப்பாயாக வென்றும் சொன்னார்கள், எ-று. (39)

 396. அழுந்தி நீ சோகந் தன்னி லரியவிப் பிறவி யாலாஞ்
     செழும்பய னிழந்தி டாதே திருவறஞ் செறிந்து சிந்தை
     ஏழுந்தநல் விசோதி தன்னா லிடர்க்கடல் கடந்து பற்றி
     லழுந்திய வினையை வெல்லு மறத்துவித்தமைக்க வன்றார்.

    (இ-ள்.)  (பின்னரும்)  நீ  - நீ, சோகந்தன்னில் - சோகத்திலே,
அழுந்தி  -  முழுகி,  அரிய  - பெறுதற்கரிய, இப்பிறவியால் - இந்த
மனிதப்  பிறப்பினால்,   ஆம்   -   ஆகும்படியான,    செழும்  -
செழிப்பையுடைய,   பயன்   -   பலனை,  இழந்திடாது  -  இழந்து
போகாமல்,  திருவறம்  -  ஸ்ரீஜிந  தருமத்தை, செறிந்து  - சேர்ந்து,
சிந்தை  -  மனதில்,  எழுந்த  -  உண்டாகிய, நல் - நன்மையாகிய,
விசோதி