184மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

ஒன்றில்லை -   ஒன்றுமில்லை, (நான் எனது நன்மைக்காகத் தவத்தை
விரும்பினேன்) என்றாள் - என்று கூறினாள், எ-று.

     உரையல் -  எதிர்மறை  வியங்கோள்; சொல்லாதிருக்க என்பது
இதன் பொருள். (44)

 401. மறம்புரிந் திலங்கும் வைவேல் மன்னவன் றேவி யுள்ளந்
     திறம்புரிந் தெழுந்த வண்ண மறிந்தபின் சீய சந்தன்
     றுறம்புரிந் தடிக ளென்று தொழுதுடன் படலு நீல
     நிறம்புரிந் தெழுந்த வைம்பா னெறிமையி னீக்கி னாரே.

   (இ-ள்.)   ( அவ்வாறு  கூறியவுடனே )  மறம் - வீரத்தொழிலை,
புரிந்து  -  செய்து,  இலங்கும்  -  பிரகாசியா நின்ற, வை - கூர்மை
பொருந்திய, வேல் - வேலாயுதத்தையுடைய, மன்னவன் - சிம்மசேன
மஹாராஜனது, தேவி - மனைவியாகிய இராமதத்தையின்,  உள்ளம் -
மனமானது,  திறம்  புரிந்து -  (தவத்திலே)  உறுதி செய்து (அதாவது
திடமாகி),  எழுந்த  - சென்ற,  வண்ணம் - விதத்தை, அறிந்தபின் -
தெரிந்தபிறகு,  சீயசந்தன்  -  சிம்மச்சந்திரன்,  துறம்புரிந்து - (அவள்
அவ்வாறு    கொண்ட)  துறவை  விரும்பி,  அடிகள்  - அடிகளே!,
(உங்கள்  விருப்பப்படியே  செய்க), என்று - என்றுசொல்லி, தொழுது
-  வணங்கி,  உடன்படலும் - அத்தவத்திற்குச் சம்மதித்தலும், (அவள்
தவத்திற்குச்    சென்றனள்;    அவ்வாறு    சென்ற  பின்   அந்த
இராமதத்தாதேவியினுடைய)  நீலநிறம்புரிந்து  - நீலநிறத்தைச் செய்து,
(அதாவது  நீலநிறமாகி),  எழுந்த  - வளர்ந்த,  ஐம்பால் - கூந்தலை,
நெறிமையின் -  தீட்சா விதியின்படி, நீக்கினார் - (ஆர்யாங்கனைகள்)
பரிஹரித்தார்கள், எ-று.

       ?உங்கள்  விருப்பப்படியே  செய்க?  என்பது இசையெச்சமாக
வருவித்துரைக்கப்பட்டது. (45)

 402. அனிச்சத்தம் போது கொய்வார் போலணி மயிரை வாங்கிப்
     பனிச்செப்பை யனைய கொங்கை பானிறப் படத்தின் வீக்கித்
     தனிச்சித்தம் வைத்த நங்கை தாமரைப் பூவி லன்னம்
     பனிச்சுத்தன் சூட்டு வீழ விருந்ததோர் படி யிருந்தாள்.

    (இ-ள்.)  (அவ்வாறு    நீக்கவே)  தனிச்சித்தம்  - ( இரத்தினத்
திரயமாகிய ஆத்மபாவனையில்) ஏகாக்கிரமாகிய மனத்தை,  வைத்த -
ஸ்தாபித்த,   நங்கை   -    இராமதத்தாரியாங்கனை,  அனிச்சத்து -
அனிச்சத்தினுடைய,   அம்  -    அழகிய,  போது  -  புஷ்பத்தை,
கொய்வார்போல்  -  பறிப்பவர்களைப்போல,   அணி   -  அழகிய,
மயிரை  -  கூந்தலை, வாங்கி - நீக்கி, பனி - குளிர்ச்சி பொருந்திய,
செப்பை