பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 185


Meru Mandirapuranam
 

அனைய -  இரத்தினச் செப்பை நிகர்த்த, கொங்கை - ஸ்தனங்களை,
பால்நிற  -  பால்போன்ற  வெள்ளிய  நிறத்தையுடைய,  படத்தின் -
வஸ்திரத்தினால்,  வீக்கி  -   இறுக்கிக்கட்டி,  அன்னம்  -  ஹம்ஸ
பக்ஷியானது,  தன்  -  தன்னுடைய,  பனிச்சூட்டு - மயிர்ச்சுருளோடு
கூடிய     உச்சிக்கொண்டையானது,  வீழ  -  உதிர்ந்துவீழ,  (தலை
மொட்டையுடனே),   தாமரைப்பூவில்   -   தாமரைப்  புஷ்பத்திலே,
இருந்ததோர்படி -  இருந்த  ஒருவிதமாக,  இருந்தாள் - இருந்தனள்,
எ-று. (46)

 403. அரசிளங் குமரன் பைம்பொ னளவின்றி யீந்து பின்னைப்
     பிரசநின் றறாத பிண்டிப் பிரான்றிருச் சிறப்பி யற்றி
     மரையிருந் தவளைப் போலு மிராமைதன் றுறவைக் கண்டு
     விரைமலர் சொரிந்து வாழ்த்தி மீண்டுதன்னகரம் புக்கான்.

     (இ-ள்.)    (அப்படியிருந்தபோது)        அரசிளங்குமரன் -
யுவராஜனானவன்,மரையிருந்தவளை - தாமரைப்பூவில் வாசஞ்செய்யும்
இலக்குமியை, போலும் - நிகர்க்கின்ற,இராமைதன் - இராமதத்தையது,
துறவை - தீக்ஷையை, கண்டு - பார்த்து  (அவளுடைய பாதங்களில்),
விரை - வாசனை  தங்கிய,  மலர் - புஷ்பங்களை, சொரிந்து - தூவி,
வாழ்த்தி  -   அவளை   ஸ்தோத்திரமும்   பண்ணி   (யாசகர்க்கு),
பைம்பொன் - பசுமைபொருந்திய பொற்காசுகளை, ஈந்து - தானமாகக்
கொடுத்து,   பின்னை  -  பிறகு,  பிரசம்  -  வண்டுகள்,  நின்று  -
நிலைபெற்று,        அறாத      -  நீங்காதிருக்கின்ற,   பிண்டி -
அசோகவிருட்சத்தையுடைய,     பிரான்  - சர்வக்ஞனுக்குரிய, திரு -
அழகிய,  சிறப்பு  -  பூஜையை, இயற்றி - செய்து, மீண்டு - திரும்பி,
தன்  நகரம்  - தன்னுடைய  பட்டணத்தில், புக்கான் - அடைந்தான்,
எ-று. (47)

 404. மத்தமால் களிறு வான்கை யிழந்தது போன்றி ராம
     தத்தையைப் பிரிந்து சீய சந்திரன் சால வாடி
     முத்தணி முலையி னார்தம் முறுவலுஞ் சிறிய நோக்கும்
     பித்தன்வாய்ப் பட்ட நல்ல பிரசம்போற் றிரிந்த வன்றே.

    (இ-ள்.)  (அதன்மேல்)  மத்தம்  -  மதம்பொருந்திய,  மால்  -
பெரிதாகிய,  களிறு  -  யானையானது, வான் - சிறந்த, கை - தனது
துதிக்கையை,  இழந்தது   போன்று  -   இழந்துவிட்டதை  நிகர்த்து,
சீயசந்திரன்   -   சிம்மச்சந்திரன்,   இராமதத்தையை  -  தாயாகிய
இராமதத்தா  தேவியை,  பிரிந்து  -  நீங்கி,  சால - மிகவும், வாடி -
வாட, (அதனால்  அவனுக்கு  சம்ஸார  விரக்தியுண்டாகி), முத்தணி -
முத்துமாலையை  அணிந்த,  முலையினார்தம் -  ஸ்தனங்களையுடைய
தேவிமார்களின்,   முறுவலும்    - புன்சிரிப்பும்,  சிறிய  நோக்கும் -
கடைக்கண்  பார்வையும்,  (இனிமையைச்  செய்யாமல்),   பித்தன்  -
பைத்தியம் பிடித்தவனுடைய, வாய்ப்பட்ட - வாயிலே சேர்ந்த, நல்ல -
இனிமையாகிய, பிரசம்போல் -  தேனைப்போல, (அதாவது  -  தேன்
அவ