186மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

னுக்கு இனிமையைச் செய்யாமல் விகற்பப்பட்டிருப்பதுபோல), திரிந்த-
வேறுபட்டன, (அதாவது : அவன் போகத்தில் வெறுப்புற்றான்), எ-று.

        வாட என்பது வாடி எனத் திரிந்து வந்தது. (48)

405. ஈன்றதா யென்ப தன்றி யிறந்தநாட் சிறந்த வன்பிற்
    றோன்றினா னாத லானும் பிரிவின்மா துயர முற்றா
    னான்றவர்க் காய நன்றி யணுவுமா மேரு வாகித்
    தோன்றுமேழ் பிறவி தோறுந் தொடர்ந்துவீ டெய்து காறும்.

   (இ-ள்.)  ( இந்த      இராமதத்தை )   ஈன்ற  -  இப்பிறப்பில்
தன்னைப்பெற்ற,  தாய்  என்பதன்றி - தாயென்பதுமல்லாமல், இறந்த
நாள் - முன்னே  கழிந்த நாளிலும், (ஏற்பட்ட), சிறந்த - சிறப்பாகிய,
அன்பின் -  ஆசையினால்,  (இந்தச் சிம்மசந்திரன்),  தோன்றினான்
ஆதலானும் -  இவள்  கருப்பத்திலேயே   பிறந்தானாகையினாலும்,
(இப்போது), பிரிவின் - இவளுடைய பிரிவினால்,மா  துயரமுற்றான் -
மிகுந்த   வருத்தமடைந்தான்,   (இவ்வுலகில்),    ஆன்றவர்க்கு  -
பெரியோர்களிடத்து,  ஆய  - உண்டாகிய, நன்றி - நன்மையானது,
அணுவும் - அணுவளவாயிருப்பதும், மேருவாகி -  மகாமேருவுக்குச்
சமானமாகப்  பெரிதாகி,  ஏழ்பிறவி  தோறும் -  மறுபடியுண்டாகும்
ஏழு  பிறப்புக்களிலும்,  வீடு  எய்து  காறும் -   மோக்ஷமடையும்
பரியந்தமும்,  தொடர்ந்து  -  சேர்ந்து,   தோன்றும் - விளங்கும்,
எ-று. (49)

 406. பகைவர்தம் நண்பு போலப் பைந்தொடிப் பவழ வாயார்      முகைமுலை கண்ணுந் தோளு முறுவலுஞ் செறிய வந்த
     வுவகையி னோடு நாளி லுறுதவ னொருவன் வந்தான்
     புகரிலா நெறி விளக்கும் பூரசந் திரனென் பானே.

    (இ-ள்.)  (இப்படி யிருக்கும்போது)  பைந்தொடி -  பசுமையான
வளையல்களையும்,  பவழவாயார் - பவழம்போன்ற வாயையுமுடைய
ஸ்திரீகளின்,   முகை  -   தாமரை  மொக்குப்போன்ற,   முலை  -
ஸ்தனங்களும்,  கண்ணும்  -  கண்களும்,  தோளும் - தோள்களும்,
முறுவலும்  -  புன்சிரிப்பும்,  செறிய -   தன்னிடத்தே சேர, வந்த -
அவற்றினாலே  வந்த,  உவகையின் - சந்தோஷத்தில், பகைவர்தம் -
சத்துருக்களுடைய,     நண்பு     போல     -    உள்ளன்பிலாத
சிநேகத்தைப்போல,    (அகப்பற்றின்றி  யிருந்து),   ஓடும்நாளில்  -
(மேற்கூறியபடி)  சிம்மச்சந்திரன்  இல்லறத்தில் செல்கின்ற காலத்தில்,
புகரிலா  -  குற்றமில்லாத,  நெறி -  சன்மார்க்கத்தை,  விளக்கும் -
தெரிவிக்கும்படியான,   பூர   சந்திர   னென்பான்   -    பூரணச்
சந்திரனென்னும்  பெயரையுடையானாகிய,  உறுதவன்  ஒருவன்  -
மகாதபஸையுடைய ஒரு முனிவன், வந்தான் - அவனிடத்தே வந்து,
சேர்ந்தான், எ-று. (50)