188மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

 409. வந்தவ ணியம முற்றி யிருந்தமா தவனை வாழ்த்தி
     அந்தமும் பிறவிக் குண்டோ வில்லையோ வருளு கென்ன
     அந்தமுண் டாகும் பான்மை யணியவர்க் கருந்த வத்தான்
     மைந்தமற் றவையி லார்க்கு மாற்றிடைச் சுழற்சி யேயாம்.

    (இ-ள்)    (அதன்மேல்) அவண் - அவ்விடத்தில், வந்து - வந்து
சேர்ந்து,    நியமம் - தம்முடைய    நியமங்கள்,    முற்றி - முடிய
(அதாவது     நியமங்களை முடித்துக்கொண்டு),     இருந்த - தங்கிய,
மாதவனை -    உத்திருஷ்டமாகிய    தபஸையுடைய    முனிவரரை,
வாழ்த்தி - சிம்மச்சந்திரன்     ஸ்தோத்திரம்பண்ணி,     பிறவிக்கு -
இச் சம்ஸார     பிறப்புக்கு,     அந்தமும் - முடிவும்,    உண்டோ -
உண்டாகுமோ,     இல்லையோ    - உண்டாகாதோ,     அருளுக -
அதன் விவரத்தை    எனக்கு    உபதேசித்    தருள்வீராக, என்ன -
என்று கேட்க  (அவன்), மைந்த - இராஜபுத்திரனே!,     பான்மை -
பவ்வியத்துவ    குணமாகிய,     அணியவர்க்கு    - அழகைப்பெற்ற
பாவிதாத்மர்களுக்கு,    அருந்தவத்தால் - அரிதாகிய     தபஸினால்,
அந்தமுண்டாகும் - முடிவு     உண்டாகும்,     அவையிலார்க்கு -
அந்தப்பவ்வியத்துவமும்    தபஸு ம் இல்லாதவர்களுக்கு,    மாற்றிடை
- நற்கதிக்கு        மாற்றமாயிருக்கின்ற         இச்சம்ஸாரத்திலேயே,
சுழற்சியே    யாம் - முடிவில்லாமல்    சுழன்றுகொண்     டிருப்பதே
சம்பவிக்கும், எ-று.

முற்றவென்பது முற்றியெனத் திரிந்து வந்தது. (53)

 410. பான்மையின் பரிசென் னென்னிற் பழுத்தலுக் காற்றல் பிந்தி
     ஈனமாய்ப் பெருகி வந்த திலையிடைக் கனியு மிவ்வா
     றூனமொன் றிலாத பான்மை யுயிரிடைக் கனியும் வீட்டைத்
     தானம்பன் னிரண்டின் மெய்ம்மைத் தவத்திலை யடுத்த போழ்தே.

    (இ-ள்.)   ஈனமாய் -  முதலில்  குறைவாயிருந்து (  அதாவது :
சிறிதாயிருந்து),    பெருகி  -   பின்னாற்  கொஞ்சங் கொஞ்சமாகப்
பெருத்து,  வந்தது  -  வந்த  வாழைக் காயானது, (இயற்கையிலேயே
மரத்தில்  பழுக்கக்கூடியது  எனினும்  அதனைத்  தாறுடன் அறுத்து
வாழைச்சருகு முதலிய இலைகளோடு சேர்த்துப் புதைத்து வைத்தால்),
இலையிடை  - அந்த  இலைகளின்  இடையிலிருந்தும்,  கனியும்  -
பழுக்கும், இவ்வாறு - இந்தப் பிரகாரமே, பான்மையின் - மேற்கூறிய
பவ்வியத்துவத்தினுடைய,   பரிசு  -  குணமானது,  என்னெனில்  -
யாதென்றால்,   பழுத்தலுக்கு   -   அது  சம்ஸாரத்தின்  முடிவை
அடைதற்கு,   ஆற்றல்   -   (இயற்கையிலேயே)   சக்தியுடையதா
யிருத்தலாம்,   (எனினும்),  பிந்தி  -  பிறகு,  ஊனமொன்றிலாத  -
குற்றமொன்றுமில்லாத,  பான்மை  -  அந்தப்  பவ்வியத்துவமானது,
உயிரிடை - ஆத்மனிடத்தில், தானம் பன்னிரண்டின் - பன்னிரண்டு
ஸ்தானவரிசையாகிற, மெய்ம்மை - உண்மை பொருந்திய, தவத்திலை
- தடமாகிய இணைய, அடுத்த