பார் - நெல்லரிசியால்
சமைத்த அன்னங்களை உண்பாரும்,
தமர்களுக்கு - சுற்றத்தார்களுக்கு, ஊட்டுவாரும் -
அவற்றை
ஊட்டுகின்றவர்களும், வேலை - சமுத்திரஞ்
சூழ்ந்த, நல் -
நன்மையாகிய, உலகம் - இந்தப் பூமியில், விற்கும் - விற்கப்படுகிற,
விழுப்பொருள் - பெரிய பொருள்கள்,
வாங்குவாரும் -
வாங்குகின்றவர்களும், ஆலயம்தோறும் - ஸ்ரீகோயில்கடோறும், ஐமை
- பூசனைச் சிறப்பை, அமர்ந்து -
பொருந்தி, செய்வாரும் -
செய்கின்றவர்களும், ஆனார் - ஆகியவர்களாய் விளங்குவார்கள்,
எ-று. (39)
40. முழவமா முரசஞ் சங்கங் கடலென முழங்க வம்பொற்
குழலியாழ் வீணை ஏங்கக் கொம்பனார் குலாவி யாட
நிழலுலா மதியம் போலுங் குடைமும்மை நீழல் வேந்தன்
விழைவறா மூதூர் வீத சோகமாய் விளங்கு நின்றே.
(இ-ள்) முழவம் -
மத்தளங்களும், மா - பெரிய, முரசம் -
பேரிகைகளும், சங்கம் - ஊதுசங்குகளும், கடலென - சமுத்திரம்போல,
முழங்க - சப்திக்கவும், அம் - அழகிய, பொன் - பொன்னாலாகிய,
குழல் - புள்ளாங்குழல்களும், யாழ் - யாழாகிய, வீணை - நால்வகை
வீணைகளும், ஏங்க - சப்திக்கவும், கொம்பனார் - பூங்கொடி போன்ற
நர்த்தனமாதர்கள், குலாவி - பிரகாசித்து, ஆட - நர்த்தனம் பண்ண,
நிழல் உலாம் - குளிர்ந்த கிரணங்கள் பரவுகின்ற, மதியம்போலும் -
சந்திரன்போன்ற, குடைமும்மை - சத்திரத்திரயத்தினது,
நிழல் -
நிழலிலுள்ள, வேந்தன் - அருகபரமனது, விழைவு - திருவிழாக்கள்,
அறா - பற்றறாத, மூதூர் -
பெரிதாகிய அப்பட்டணமானது,
வீதசோகமாய் - சோகமில்லாமல், நின்று விளங்கும் - நிலைபெற்றுப்
பிரகாசித்திருக்கும்,(வீதசோகம் என்னும் நகர் வீதசோகமாய் விளங்கும்
என்றபடி.), எ-று. (40)
வைசயந்தன் சரிதை
____
வேறு.
41. பொன் னுலகுலாய்ப் போந்து பூமிசை
மன்னு மன்னவிம் மாந கர்க்கிறை
யன்ன மென்னடை யார்க் கனங்கனா
மன்னர் மன்னவன் வைச யந்தனே.
(இ-ள்) பொன்னுலகு
- தேவலோகமானது, உலாய்ப்போந்து -
எழுந்தருளிவந்து, பூமிசை - பூமியின்மேலே, மன்னும் - சேர்ந்ததற்கு,
அன்ன - ஒத்திராநின்ற, இம்மாநகர்க்கு - இந்த வீதசோகம் என்னும்
பட்டணத்திற்கு,இறை - அதிபதியானவன், அன்னமென்னடையார்க்கு -
அன்னப்பறவை போலும் |