பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 191


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)   (அவ்வாறு   சொல்லி    மேலும்)    நெருப்பிடை  -
நெருப்பினிடத்தில்,  கிடந்த - தங்கியிருந்து (கொதிப்பேறிய), செம்பில்
- செம்பிலே, பட்ட - அடைந்த,  நீர்த்துள்ளிபோலும் - ஜலத்துளியை
நிகர்க்கின்ற,  விருப்பிடை  -  ஆசையாகிய (அக்கினியில்), கிடந்த -
தங்கியிருந்த,உள்ளத்து - மனத்தில்,எழுந்த - உண்டாகிய, வேகத்தின்
- தீவிரத்தினாலாகிய,இன்பம் - சுகமானது, திருத்தியைச் செய்யுமென்று
- திருப்தியை  உண்டாக்குமென்று,  புலத்தினை - அறிவை, செறிய -
அதுசேர, நிற்றல் -  அதன்  வழியிலே நிற்பது, (அதாவது : அறிவால்
அதைப்பற்றி நிற்பது),  நெருப்பை  -  அக்கினியை, நெய்தெளித்து -
நெய்யை ஊற்றி,  அவிப்பான் -  அவிக்கும்பொருட்டு, எழுந்தவன் -
பிரவேசித்தவனுடைய, நினைப்பின் - எண்ணத்தைப்போன்ற, ஒன்று -
ஓர் எண்ணமாகும், எ-று. (58)

 415. பூமியந் தரத்து வந்து பொருந்திய புலத்தி னாசை
     யோவிலந் துய்த்தும் வேறோர் சுவையின்மை யுணர்ந்து மீட்டும்
    மேவுதற் கெழுதல் மென்று விட்டதை மென்ற லன்றிக்
    கூவல்மண் டூகம் போலுங் குணத்தமே நினைக்கி னென்றான்.

   (இ-ள்.)     பூமி   -    இப்பூவுலகத்திலும்,    அந்தரத்து   -
தேவலோகத்திலும், வந்து - (நாம்) ஜனனமெடுத்து வந்து, பொருந்திய
- சேர்ந்த, புலத்தின் - இந்திரிய விஷயங்களினாலுண்டாகிய, ஆசை -
விருப்பங்களை, ஓவிலம் - நீங்காதவர்களாய்,துய்த்து - இடைவிடாமல்
அனுபவித்தும், (அவற்றில்),வேறோர் - வேறு நூதனமாகிய ஒரு, சுவை
- ரஸமானது,இன்மை - இல்லாததை, உணர்ந்தும் - அறிந்தும், மீட்டும்
- மறுபடியும், மேவுதற்கு -  அவற்றைப்  பொருந்துதற்கு,  எழுதல்  -
முயற்சித்தல், மென்று விட்டதை - முதலிலே மென்றுமிழ்ந்துவிட்டதை,
மென்றல் -   மறுபடியும்     எடுத்து   மெல்லுதலாம்,   அன்றி   -
இதுவுமல்லாமல்,  நினைக்கின் -  (இக்குணத்தை நன்றாக) ஆராய்ந்து
பார்க்குமிடத்து,   (  இக்குணமுடைய      நாம் ),      கூவல்   -
கிணற்றினுள்ளிருக்கப்பட்ட,    மண்டூகம்போலும்   - (வெளி  விஷய
மொன்றையுமறியாத) தவளையைப்போன்ற,  குணத்தமே  - (வேறொரு
நிலைத்த சுகத்தை யுணராத) குணத்தினையுடையோமாவோம்,என்றான்
- என்றும் அவ்வரசன் நினைத்தான், எ-று. (59)

 416. பெறற்கரும் பிறவி காட்சி பெருந்தவந் திருந்து மாற்றஞ்
     சிறப்புடைக் குலநல் யாக்கை செறிவித்த செழுந் தவத்தை
     மறப்பனேல் மாற்றை யாக்கு மிவையும்வந் தணுக்கா வென்று
     திறத்துளி தெரிந்து திங்கணாமற்குத் தெரியச்சொன்னான்.

    (இ-ள்.)   (அவ்வாறு   நினைத்துப்   பின்னர்)   பெறற்கரும் -
பெறுதற்கரிதாகிய,  பிறவி  -  இம்மனிதப்  பிறப்பையும்,   காட்சி  -
தரிசனத்தையும், பெருந்